அரசியல் களத்தில் களம் காணும் திரிஷா; தேசிய கட்சியில் ஐக்கியமாக திட்டம்

தென்னிந்திய நடிகையாக இருக்கும் திரிஷா, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். 40 வயதை நெருங்கினாலும் இளமை குறையாமல், தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர், தற்போது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். கைவசம் ஏராளமான படங்களையும் வைத்திருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கும் திரிஷா, கர்ஜணை, சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். இதுதவிர, விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்திலும் திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பல நடிகைகளுக்கு மார்க்கெட் குறைந்திருந்தாலும், திரிஷாவின் நடிப்பு மற்றும் வசீகரம் அவருக்கான பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. சமீபகாலமாக பட வாய்ப்புகளை குறைத்துக் கொண்டிருந்த அவர், மீண்டும் புயல்வேகத்தில் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். நடிப்பதைக் கடந்து அவருக்கு அரசியல் ஆசையும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அந்தவகையில் அவருடைய அரசியல் ஆசை விரைவில் புது பரிமாணத்தை எட்ட இருப்பதாக சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. குஷ்பூ, நமீதா உள்ளிட்ட நடிகைகளைப் போலவே தேசிய கட்சியில் ஐக்கியமாக திட்டமிட்டிருக்கும் அவர், அதிகாரப்பூர்வமாக ஒரு கட்சியில் இணைய இருக்கிறாராம்.

அந்த கட்சி காங்கிரஸ் என பரவலாக பேசப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேசிய அரசியலில் கவனம் செலுத்த திட்டமிட்டிருக்கும் திரிஷா, எப்போது இந்த அறிவிப்பை வெளியிடப்போகிறார் என அவரது ரசிகர்கள் உள்ளிட்டோர் எதிர்பார்த்துள்ளனர். கைவசம் இருக்கும் படங்களை நடித்து முடித்த பின்னர் முழு நேர அரசியலில் அவர் ஈடுபடலாம் என கூறப்படுகிறது. அதாவது, 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திரிஷாவின் அரசியல் பயணத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.