சொந்த மண்ணிலேயே மரண அடி! படுமோசமாக தோல்வியடைந்த இங்கிலாந்து..மிரட்டிய ஒற்றை வீரர்


லார்ட்ஸ் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது

இந்த டெஸ்டில் 7 விக்கெட்டுகள் மற்றும் 28 ஓட்டங்கள் எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர் கசிகோ ரபாடா ஆட்டநாயகன் விருது பெற்றார் 

லார்ட்ஸில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது.

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 165 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக போப் 73 ஓட்டங்கள் எடுத்தார்.

தென் ஆப்பிரிக்க தரப்பில் ரபாடா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். நோர்ட்ஜெ 3 விக்கெட்டுகளையும், ஜென்சென் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

சொந்த மண்ணிலேயே மரண அடி! படுமோசமாக தோல்வியடைந்த இங்கிலாந்து..மிரட்டிய ஒற்றை வீரர் | Sa Won Eng Innings And12 Runs Lords

PC: AFP

பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 326 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக சரேல் எர்வீ 73 ஓட்டங்களும், ஜென்சென் 48 ஓட்டங்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் பிராட், ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

சொந்த மண்ணிலேயே மரண அடி! படுமோசமாக தோல்வியடைந்த இங்கிலாந்து..மிரட்டிய ஒற்றை வீரர் | Sa Won Eng Innings And12 Runs Lords

அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதனால் அந்த அணி 37.4 ஓவர்களில் 149 ஓட்டங்களுக்கு சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

சொந்த மண்ணிலேயே மரண அடி! படுமோசமாக தோல்வியடைந்த இங்கிலாந்து..மிரட்டிய ஒற்றை வீரர் | Sa Won Eng Innings And12 Runs Lords

அதிகபட்சமாக அந்த அணியில் லீஸ் 35 ஓட்டங்களும், பிராட் 35 ஓட்டங்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க தரப்பில் நோர்ட்ஜெ 3 விக்கெட்டுகளையும், ரபாடா, மஹாராஜ் மற்றும் ஜென்சென் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.