டெல்லி துணை முதல்வர் வீட்டில் சிபிஐ ரைடு..! சிக்கிய பொருட்கள் விபரம் ..!

டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் இன்று சிபிஐ சோதனை நடத்திய நிலையில், அவரது வீட்டில் பென்சில்கள் மற்றும் ஜியோமெட்ரி பாக்ஸ்களைத் தவிர வேறு எதையும் சிபிஐ கண்டுபிடிக்காது என்று ஆம் ஆத்மி கட்சி கேலி செய்தது.

ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கல்வி திட்டம் குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் இடம் பெற்ற பிறகுதான் சிபிஐ மணீஷ் சிசோடியாவின் வீட்டிற்கு வந்ததாக குற்றம் சாட்டினார்.சிபிஐ கடந்த ரெய்டுகளில் எதையும் கண்டுபிடிக்கவில்லை, இன்று எதையும் கண்டுபிடிக்க முடியாது என்று ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதி ராகவ் சத்தா கூறினார்.

“அவர்கள் அரவிந்த் கெஜ்ரிவாலை சோதனை செய்தனர் அதில் நான்கு மப்ளர்களை மட்டும் கண்டுபிடித்தனர். மேலும் மணீஷ் சிசோடியாவின் வீட்டில் பென்சில்கள், நோட்புக்குகள் மற்றும் ஜியோமெட்ரி பாக்ஸ்களை தான் அவர்கள் கண்டுபிடிப்பார்கள்” என்று சத்தா செய்தியாளர்களிடம் கூறினார்.

100க்கும் மேற்பட்ட ஆம் ஆத்மி கட்சியினர் மீது பொய் வழக்கு போடப்பட்டதாகவும், “ஒவ்வொரு வழக்கிலும் நாங்கள் ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டோம்” என்றும் அவர் கூறினார். மணீஷ் சிசோடியாவை கைது செய்ய சிபிஐ தயாராகி வருகின்றனர்.

2015ல் கெஜ்ரிவாலின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். டெல்லியின் கல்வி மற்றும் கலால் துறை அமைச்சராக இருக்கும் மணீஷ் சிசோடியா, ஒன்பது மாதங்களுக்கு நடைமுறைப்படுத்திய புதிய மதுபானக் கொள்கையை கடந்த மாதம் ரத்து செய்வதற்கு முன் சிபிஐயால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

டெல்லியில் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் லெப்டினன்ட் கவர்னரின் அனுமதியின்றி யார் மது விற்கலாம் என்ற கொள்கையை சிசோடியா அறிமுகப்படுத்தியதாக சிபிஐ கூறுகிறது. இந்தக் கொள்கையின்படி, டில்லி அரசு தனியார் நிறுவனங்களை மது விற்பனை செய்வதற்கான உரிமங்களை அதிகரிக்க முயற்சித்தது. ஊழலைச் சமாளிப்பதற்கும், சக்திவாய்ந்த மதுபான மாஃபியாவை எதிர்த்துப் போராடுவதற்கும் இந்தக் கொள்கை என்று சிசோடியா கூறியுள்ளார் .

தலைநகரில் அவரது கல்வி திட்டத்திற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் பாராட்டுக்களை பெற்றதால் சிசோடியா குறி வைக்கப்பட்டதாக ஆம் ஆத்மிகுற்றம் சாட்டியுள்ளது. நியூயார்க் டைம்ஸ் சில தினங்களுக்கு முன்பாக தனது முதல் பக்கத்தில் சிசோடியா பற்றிய கட்டுரையை வெளியிட்டது.

கெஜ்ரிவாலின் உயரும் தேசிய அந்தஸ்து குறித்த பதட்டத்தால் பிஜேபியும் பிரதமர் நரேந்திர மோடியும் ஆம் ஆத்மி மீதி விசாரணை அமைப்புகளை கொண்டு ஒடுக்க முயன்று வருவதாக சத்தா கூறினார். “முன்பு அவர்கள் மோடி vs யார்? என்று அரசியல் செய்தார்கள். பிறகு நங்கள் பஞ்சாப் தேர்தலில் வென்ற பிறகு, அதே மக்கள் மோடி vs கெஜ்ரிவால் என்று கூறுகிறார்கள்,” என்று சத்தா கூறினார்.

“கேஜ்ரிவாலை முடித்து விடுங்கள்’ என்பதே பாஜகவின் ஒரே திட்டமாகும். நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியான ஒரு நாள் கழித்து சிபிஐ குழு இறங்கியது தற்செயல் நிகழ்வு அல்ல” என்று அவர் குற்றம் சாட்டினார்.

ஆம் ஆத்மி கட்சியின் மீதான சிபிஐ விசாரணை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.