இந்தியாவில் பரவும் தக்காளி காய்ச்சல்; தமிழகத்துக்கு எச்சரிக்கை

புதுடெல்லி: இந்தியாவில் புதிதாக தக்காளி காயச்சல் என்ற நோய் பரவி வருகிறது. கொரோனா, குரங்கம்மை உட்பட உலகளவில் உருவாகும் அனைத்து நோய்களும் முதலில் கண்டறியப்படும் மாநிலமாக கேரளா இருக்கிறது. கொரோனாவால் இந்த மாநிலம் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், ‘தக்காளி காய்ச்சல்’என்ற புதிய நோய், சிறுவர்களிடையே வேகமாக பரவி வருகிறது. கடந்த மே மாதம் 5ம் தேதி கேரளாவில் உள்ள கொல்லத்தில் இந்த நோய் முதன் முதலில் கணடறியப்பட்டது. தற்போது வரையில் அங்கு 82 சிறுவர்கள் பாதித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து,  ஒடிசாவிலும் இதர மாநிலங்களிலும் கண்டறியப்பட்டு வருகிறது. 5 வயதுக்கு உட்பட குழந்தைகள், சிறுவர்களை மட்டுமே தாக்கக் கூடிய இந்த நோய், சிறுகுடலில் உருவாகும் வைரஸ்  மூலமாக ஏற்படுகிறது. இந்த நோய் ஏற்பட்டவர்களின் உடலில் முதலில் உருவாகும் சிகப்பு நிற சிறிய கொப்புளங்கள், நாளடைவில் தக்காளி அளவுக்கு பெரிதாகும் தன்மை கொண்டது.

இதன் காரணமாகவே அதற்கு ‘தக்காளி காய்ச்சல்’என்று பெயரிடப்பட்டு உள்ளது. அதிக காய்ச்சல், உடம்பு வலி, கை, கால் மூட்டுகள் வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகளாக உள்ளன. கேரளாவில் பரவி வரும் இந்த நோய், அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா போன்றவற்றுக்கும் பரவும் அபாயம் இருப்பதால், இம்மாநில அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.