தனுஷ் பட ஹீரோயினுக்கு ஆண் குழந்தை பிறந்தது.. அம்மாவான சந்தோஷத்தில் சோனம் கபூர்!

மும்பை:
பிரபல
பாலிவுட்
நடிகர்
அனில்
கபூரின்
மகளும்
பாலிவுட்
நடிகையுமான
சோனம்
கபூர்
அழகான
ஆண்
குழந்தையை
பெற்றெடுத்துள்ளார்.

சஞ்சய்
லீலா
பன்சாலியின்
சாவரியா
படத்தின்
மூலம்
ரன்பீருக்கு
ஜோடியாக
பாலிவுட்டில்
வாரிசு
நடிகையாக
அறிமுகமானவர்
சோனம்
கபூர்.

தனுஷ்
பாலிவுட்டில்
அறிமுகமான
ராஞ்சனா
படத்தில்
சோயா
எனும்
கதாபாத்திரத்தில்
நடித்து
ஒட்டுமொத்த
ரசிகர்களின்
கவனத்தையும்
கவர்ந்திழுத்தார்.

சோனம்
கபூர்

ஸ்லம்டாக்
மில்லியனர்,
மிஷன்
இம்பாசிபிள்
உள்ளிட்ட
ஹாலிவுட்
படங்களிலேயே
நடித்து
பிரபலமானவர்
பாலிவுட்
நடிகர்
அனில்
கபூர்.
அவரது
மகளான
சோனம்
கபூர்
கடந்த
2007ல்
பாலிவுட்டில்
வெளியான
சாவரியா
படத்தின்
மூலம்
ஹீரோயினாக
அறிமுகமானார்.
டெல்லி
6,
ராஞ்சனா,
பாக்
மில்கா
சிங்,
நீர்ஜா,
பேட்
மேன்,
சஞ்சு,
தி
சோயா
ஃபேக்டர்
உள்ளிட்ட
பல
படங்களில்
நடித்துள்ளார்.

தனுஷ் ஜோடி

தனுஷ்
ஜோடி

இயக்குநர்
ஆனந்த்
எல்
ராய்
இயக்கத்தில்
கடந்த
2013ல்
வெளியான
ராஞ்சனா
படத்தின்
மூலம்
பாலிவுட்டில்
அறிமுகமானார்
நடிகர்
தனுஷ்.
அந்த
படத்தில்
அவருக்கு
ஜோடியாக
சோயா
எனும்
கதாபாத்திரத்தில்
நடித்திருந்தார்.
பள்ளி
மாணவியாக
தனுஷை
அறையும்
காட்சிகளில்
தொடங்கி,
கடைசியாக
தனுஷை
கொல்ல
அனைத்து
ஏற்பாடுகளையும்
அரசியலுக்காக
செய்வது
வரை
நடிப்பில்
மிரட்டி
எடுத்திருப்பார்.

லெஸ்பியன் படம்

லெஸ்பியன்
படம்

அப்பா
அனில்
கபூர்
மற்றும்
கோலிவுட்
நடிகை
ரெஜினா
கசாண்ட்ராவுடன்
இணைந்து
கொண்டு
லெஸ்பியன்
படமான
‘Ek
Ladki
Ko
Dekha
Toh
Aisa
Laga’
படத்தில்
படு
போல்டாக
நடித்து
பாராட்டுக்களை
குவித்தார்.
பிளைண்ட்
எனும்
புதிய
படத்திலும்
நடித்து
வருகிறார்
சோனம்
கபூர்.

தொழிலதிபருடன் திருமணம்

தொழிலதிபருடன்
திருமணம்

தொழிலதிபரான
ஆனந்த்
அஹுஜாவுடன்
கடந்த
2018ம்
ஆண்டு
திருமணம்
செய்து
கொண்டார்
சோனம்
கபூர்.
உலகம்
முழுவதும்
அவருடன்
சுற்றி
திருமண
வாழ்க்கையை
4
ஆண்டுகள்
என்ஜாய்
பண்ண
நிலையில்,
இந்த
ஆண்டு
மார்ச்
மாதம்
தான்
கர்ப்பமாக
உள்ள
செய்தியை
ரசிகர்களுக்கு
தெரியப்படுத்தினார்.
தொடர்ந்து
கர்ப்ப
வயிற்றுடன்
இருக்கும்
போட்டோக்களை
இன்ஸ்டாகிராமில்
பதிவிட்டு
லைக்குகளை
அள்ளினார்.

ஆண் குழந்தை

ஆண்
குழந்தை

இந்நிலையில்,
நடிகை
சோனம்
கபூருக்கு
ஆகஸ்ட்
20,
2022ம்
தேதி
சனிக்கிழமையான
இன்று
அழகான
ஆண்
குழந்தை
பிறந்துள்ளது
என்கிற
அறிவிப்பையும்
தனது
இன்ஸ்டாகிராமில்
பதிவிட்டுள்ளார்.
சோனம்
கபூர்
மருத்துவமனையில்
குழந்தையுடன்
இருக்கும்
புகைப்படங்களும்
வெளியாகி
டிரெண்டாகி
வருகின்றன.
ரசிகர்களும்,
பாலிவுட்
பிரபலங்களும்
சோனம்
கபூரை
வாழ்த்தி
வருகின்றனர்.

பிரபலங்களுக்கு பிரசவம்

பிரபலங்களுக்கு
பிரசவம்

நடிகை
நமீதாவிற்கு
ட்வின்ஸ்
பிறந்த
செய்தி
நேற்று
வெளியான
நிலையில்,
நடிகை
சோனம்
கபூருக்கு
ஆண்
குழந்தை
பிறந்த
செய்தி
இன்று
வெளியாகி
இருக்கிறது.
சமீபத்தில்
நடிகை
பிரணிதாவும்
அழகான
பெண்
குழந்தையை
பெற்றெடுத்தது
குறிப்பிடத்தக்கது.
திருமணம்
செய்து
கொள்வது,
குழந்தையை
பெற்றுக்
கொள்வது
எல்லாம்
சினிமாவில்
நடிப்பதற்கு
ஒரு
போதும்
தடையாக
இருக்காது
என
இந்த
நடிகைகள்
எடுத்துக்
காட்டாக
எடுத்துரைத்து
வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.