37,000 அடி உயரத்தில் பயணம்.. திடீரென தூங்கிய விமானிகள்.. எத்தியோப்பியாவில் நடந்தது என்ன?

சூடானில் இருந்து எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவிற்கு எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்(ethiopian airlines) ET343 என்ற விமானம் கடந்த திங்கட்கிழமை சென்றது. இதில் விமான பணியாளர்கள் உட்பட 157 பேர் பயணம் செய்துள்ளனர்.

விமானம் அடிஸ் அபாபா விமான நிலையத்திற்கு அருகே வந்தும் தரையிறங்காமல் பறந்தது. இதனால், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையம் என்று அழைக்கப்படும் ஏடிசி(ATC) அலுவலகத்தில் இருந்து விமானத்தை தரையிறக்க உத்தரவிடப்பட்டது.

ஆனால், மறுமுனையில் இருந்து விமானிகளிடம் இருந்து எவ்வித தகவலும் வரவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் விமானிகளை தொடர்புகொள்ள மீண்டும் மீண்டும் அழைத்தனர். அப்போது பதில் கிடைக்காததால், தொழில்நுட்ப வசதிகளை கொண்டு ஆராய்ந்ததில் விமானம் ஆட்டோமெட்டிக் தொழில்நுட்பத்தில் இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டது.

புதிய பிரச்சனையில் சிக்கிய சீனா.. 6 லட்சம் பேர் பாதிப்பு!

37,000 அடி உயரத்தில் பறக்கும் விமானம் ஏன் ஆட்டோமெட்டிக் மோடில் இயங்க வேண்டும் என்று அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அதனை துண்டிவித்து அபாய ஒலி எழுப்பினர். அதன் பின்னரே விமானிகளிடம் இருந்து பதில் கிடைத்துள்ளது. பின்னர், 25 நிமிடங்கள் தாமதமாக விமானம் அடிஸ் அபாபா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அதிஷ்டவசமாக இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

விமானம் ஆட்டோமெட்டிக் மோடில் இருந்ததற்கான காரணம் குறித்து ஏடிஎஸ் தரவுகளை ஆராய்ந்த போது விமானிகள் தூங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை சம்பந்தப்பட்ட விமானிகள் மீது எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பணியின் போது இரு விமானிகளும் தூங்கிய நிகழ்வு மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.