Boeing B737 விமான விமானியின் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்தது டிஜிசிஏ

நியூடெல்லி: ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் விமானியின் உரிமத்தை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தியுள்ளது என்று வட்டாரங்கள் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளன. மே மாதம் முதல் தேதியன்று  SG-945 என்ற போயிங் B737 விமானம் வானில் பறந்துக் கொண்டிருந்தபோது, மேகங்களை தவிர்த்து விமானத்தை பறக்கச் செய்யலாம் என்றும், மேகங்களின் வழியாக பறக்க வேண்டாம் என்றும், தலைமை விமானியிடம், துணை விமானி கேட்டுக் கொண்டார், ஆனால் அதை கேப்டன் விமானி புறக்கணித்தார்.

மும்பையிலிருந்து துர்காபூருக்கு SG-945 என்ற போயிங் B737 விமானம் இயக்கப்படும் விமானம், இறங்கும் போது கடுமையான கொந்தளிப்பை எதிர்கொண்டது, இதன் விளைவாக ஒரு சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது.

விமானத்தில் இரண்டு விமானிகள் மற்றும் நான்கு கேபின் பணியாளர்கள் உட்பட மொத்தம் 195 பேர் இருந்தனர். மும்பையில் இருந்து மாலை 5.13 மணியளவில் விமானம் புறப்பட்டது.

விமானம் தரை இறங்கும் போது, ​​கடுமையாக குலுங்கியது. மேலும், செங்குத்து சுமை காரணி +2.64G மற்றும் – 1.36G வரை மாறுபட்டது. இந்த காலகட்டத்தில் தன்னியக்க பைலட் இரண்டு நிமிடங்களுக்கு செயலிழந்துவிட்டது மற்றும் பணியாளர்கள் விமானத்தை இயக்க நேர்ந்தது என்று டிஜிசிஏ தெரிவித்தது.

மே 2 அன்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில் இந்த சம்பவம் தொடர்பாக இவ்வாறு கூறப்பட்டிருந்தது. ஆனால் அது தொடர்பான விசாரணைக்கு பிறகு, விமான கேப்டனின் ஓட்டுநர் உரிமத்தை ஆறு மாதங்களுக்கு ரத்து செய்யும் முடிவு இன்று தான் உறுதிபடுத்தப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.