Jio Vs Airtel இந்தியாவில் 5G சேவையை முதலில் அறிமுகப்படுத்துவது யார்? தேதி அறிவிப்பு!

இந்தியாவில் நெட்ஒர்க் சேவைகளை வழங்குவதில் Reliance Jio மற்றும் Airtel ஆகிய நிறுவனங்கள் தான் முன்னணியில் உள்ளன. இரு கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் 5G சேவையை அறிமுகப் படுத்துவதற்க்கான ஏலம் சமீபத்தில் நடைபெற்றது. அதில் இந்த இரண்டு நிறுவனங்கள் தான் அதிகமான ஏலத்தை கைப்பற்றின.எனவே இந்த இரண்டு நிறுவனங்களும் இந்திய தொலைத்தொடர்பு துறையில் 5G சேவையை அறிமுகப்படுத்துவதில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே Airtel நிறுவனம் ஆகஸ்ட் 2022இல் 5G சேவையை அறிமுகப்படுத்த போவதாக அறிவித்திருந்த நிலையில் jio-வும் இதையே மாதத்தில் 5G சேவையை அறிமுகப்படுத்த போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

குறிப்பாக Reliance Jio-விடம்தான் sub-GHz அலைக்கற்றை உள்ளது. மேலும் Airtel நிறுவனத்திடம் mid-band அலைக்கற்றை உள்ளது. இவர்கள் இரண்டு பேருமே சிறந்த மற்றும் பரவலான நெட்ஒர்க் கவரேஜை வழங்க முடியும். Jio தன்னுடைய 2022 நிதியாண்டுக்கான அறிக்கையில் 1000 நகரங்களுக்கான திட்டமிடலை ஏற்கனவே திட்டமிட்டு வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே ஆகஸ்ட்15 அன்றே இந்தியாவில் 5G சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப் பட்டிருந்த நிலையில் இந்த மாத இறுதியில் இரு நிறுவனங்களும் 5G சேவையை அறிமுகப்படுத்தலாம் என்று தெரியவந்துள்ளது. ஆகஸ்ட் 29 அன்று நடைபெறும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் 5G சேவை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எப்படி இருந்தாலும் இந்தியாவில் 5G சேவையை வழங்குவதில் இந்த இரு நிறுவனங்களுக்கு மத்தியிலும் கடும் போட்டி நிலவும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.