தனுஷின் முன்று விதமான நடிப்பை மெய்சிலிர்த்து பாராட்டிய இயக்குநர் அமீர்

சென்னை: நடிகர் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படம் பல தரப்பட்ட விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

கடைசியாக மாறன் படத்தில் நடித்திருந்த அமீர் அடுத்ததாக படம் இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் அமீர் கொடுத்த பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷின் நடிப்பை பற்றி சிலாகித்து பேசியுள்ளார்.

அமீர்

வித்தியாசமான கதைக் களத்தோடு நடிகர்களிடம் வித்தியாசமான நடிப்பை வாங்குவதில் தன்னுடைய குரு பாலாவைப் போலவே இவரும் கில்லாடி. கலர்ஃபுல்லான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த ஜீவாவை ஒரு முழுமையான நடிகனாக மாற்றியது இவர்தான். அதேபோல கேமராவிற்கு முன்பு எந்த முன் அனுபவமும் இல்லாமல் வந்த நடிகர் கார்த்தியையும் முதல் படத்திலேயே அற்புதமாக நடிக்க வைத்திருப்பார். அந்த படத்தில் நடிகை பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்ததற்கு அமீரின் பங்களிப்பு முக்கியமானது.

சந்தனத் தேவன்

சந்தனத் தேவன்

பருத்திவீரன் என்கிற காலத்தால் அழிக்க முடியாத படத்தை கொடுத்த அமீர் அதற்கு மேல் என்ன படம் எடுக்க போகிறார் என்று அப்போதே பேசப்பட்டது. அதற்கேற்றார் போல் ஆதி பகவன் திரைப்படம் வெளிவந்த போது எதிர்மறை விமர்சனங்களைத்தான் சந்தித்தது. அதனைத் தொடர்ந்து எந்த படங்களையும் அமீர் இயக்கவில்லை.சில ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த போது நடிகர் ஆர்யாவை வைத்து சந்தன தேவன் என்கிற படத்தை இயக்கப் போவதாக அமீர் அறிவித்தார். அந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் புகைப்படமும் இணையதளத்தில் வெளியானது. ஆனால் அந்தப் படம் என்னவானது என்று இதுவரை தெரியவில்லை.

நடிகர் அமீர்

நடிகர் அமீர்

பருத்திவீரனில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக யோகி என்கிற பாடத்தில் கதாநாயகனாக நடித்தார் அமீர். அதன் பின்னர் மிஷ்கின் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர் வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் நடித்து நல்ல பெயரை சம்பாதித்தார். தனுஷை விட அமீருக்கு நல்ல கதாபாத்திரம் அந்த படத்தில் அமைந்திருந்தது. அவருக்கு ஆனந்த விகடன் விருதும் கொடுக்கப்பட்டது.

தனுஷிற்கு புகழாரம்

தனுஷிற்கு புகழாரம்

வடசென்னை திரைப்படத்தை நடிகர் தனுஷ்தான் தயாரித்திருந்தார். அதன் பின்னர் மீண்டும் தனுஷ் நடித்திருந்த மாறன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அமீர். இந்நிலையில் வடசென்னை படத்தில் மூன்று விதமாக தனுஷ் நடித்திருப்பார். பள்ளி மாணவனாக ஒரு பாடி லாங்குவேஜ்யும் அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து ஒரு பாடி லாங்குவேஜ்யும், பிறகு ஜெயிலுக்கு செல்லும் காட்சிகளில் வேறு மேனரிஸத்தையும் தனுஷ் கையாண்டிருப்பார். அவருக்குள் அசுரத்தனமான நடிகர் இருக்கிறார் என்று அமீர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.