10-ம் வகுப்பு காலாண்டு தேர்வு எப்போது..? – பள்ளி கல்வி துறை அறிவிப்பு..!!

மாநில பாட திட்டத்தின் கீழ் வரும் பள்ளிகளில் 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு வருகின்ற செப்டம்பர் 26முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. 11 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 23 முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.
அக்டோபர் 1 முதல் 5ம் தேதி வரை காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு விடுமுறை ஆகும்.
பிறகு அக்டோபர் 6ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது 10-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வுகளுக்கான அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் 26-ல் தொடங்கி 30 ஆம் தேதி வரை தேர்வு நடக்க இருக்கிறது. காலாண்டு தேர்வுக்குப் பின் ஒரு வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். பின்பு அக்டோபர் 6- ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.