34 வயது லொறி ஓட்டுனரை மணந்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த 19 வயது மாணவி!


தமிழகத்தில் லொறி ஓட்டுனரை காதலித்த கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

கன்னியாக்குமரி மாவட்டத்தின் பூட்டேற்றி பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருடைய மகள் வைஷ்ணவி (19). இவர் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை.
அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கருங்கல் பொலிசில் புகார் அளிக்கப்பட்டது.

34 வயது லொறி ஓட்டுனரை மணந்து காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த 19 வயது மாணவி! | Couple Tamilnadu Married Police Station

அந்த புகாரின் அடிப்படையில் பொலிசார் வைஷ்ணவியை தேடி வந்தனர்.
இந்தநிலையில் மாயமான அவர் லொறி ஓட்டுனர் வினு (34) என்பவருடன் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

அவர்களிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது இருவரும் காதலித்து வந்ததாகவும், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறினர்.

இதனையடுத்து பொலிசார் இருவரது பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதல் ஜோடியை சேர்த்து வைத்து அனுப்பினர்கள்.  Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.