சென்னை
:
விஜய்
டிவியின்
முன்னணி
தொடரான
பாக்கியலட்சுமி
சீரியல்
தற்போது
முக்கியமான
கட்டத்தை
எட்டியுள்ளது.
பாக்கியாதான்
வீட்டை
விட்டு
வெளியேறி
தனியாக
அல்லாடுவார்
என்று
எதிர்பார்க்கப்பட்ட
நிலையில்,
தற்போது
அந்த
நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளார்
கோபி.
இந்நிலையில்
தான்
இத்தனை
ஆண்டுகாலம்
வாழ்ந்த
வாழ்க்கை
குறித்தும்
தன்னுடைய
எதிர்பார்ப்புகள்
எல்லாம்
எப்படி
பொய்த்து
போனது
என்றும்
தன்னடைய
மகன்
எழிலிடம்
குறைப்பட்டுக்
கொள்கிறார்
பாக்கியா.
பாக்கியலட்சுமி
தொடர்
விஜய்
டிவியின்
முக்கியமான
தொடராக
டிஆர்பியில்
முன்னணியில்
காணப்படுகிறது
பாக்கியலட்சுமி
தொடர்.
இந்தத்
தொடரிடம்
தன்னுடைய
முதலிடத்தை
விட்டுக்
கொடுத்துவிட்டு
ஒதுங்கியுள்ளது
பாரதி
கண்ணம்மா.
இந்தத்
தொடர்
விரைவில்
நிறைவடைய
உள்ளதாகவும்
கூறப்படுகிறது.

விறுவிறுப்பான
கதையமைப்பு
பாக்கியலட்சுமி
முதலிடத்தை
பெறுவதற்கு
அதன்
அடுத்தடுத்த
விறுவிறுப்பான
கதையமைப்பு
மற்றும்
காட்சிகளே
முக்கிய
காரணமாக
அமைந்துள்ளது.
அடுத்தடுத்து
சிறப்பான
எபிசோட்களை
கொடுத்து
வருகிறது
பாக்கியலட்சுமி
தொடர்.
பாரதி
கண்ணம்மா
போல
பிரிந்து
வாழும்
கணவன்
மனைவியை
மட்டுமே
ஃபோகஸ்
செய்துக்
கொண்டிருக்காமல்
அடுத்தடுத்து
வித்தியாசத்தை
கொடுத்து
வருகிறது.

பரபரப்பான
எபிசோட்கள்
பாக்கியலட்சுமி
டைரக்டர்
நினைத்திருந்தால்
கோபியின்
காதல்
மற்றும்
குடும்பத்திற்கு
தெரியாமல்
ஏமாற்றி
வருவதை
இன்னும்
சிறிது
காலம்
நீட்டித்திருக்கலாம்.
ஆனால்
அவர்
அதை
செய்யவில்லை.
கோபியின்
குட்டு
முதலில்
ராதிகாவிற்கும்
தொடர்ந்து
மனைவி
பாக்கியாவிற்கும்
தெரியும்படி
செய்துவிட்டார்.

கோபிக்கு
விவாகரத்து
கொடுத்த
பாக்கியா
தொடர்ந்து
பாக்கியா
உடனடியாக
கோபிக்கு
விவாகரத்து
கொடுத்தார்.
குடும்பத்தினரின்
கோரிக்கைகளை
அவர்
நிராகரித்தார்
என்பதைவிட
பிடிக்காத
கணவனுடன்
சேர்ந்து
வாழ்வதில்
யாருக்கும்
எந்த
பலனும்
இல்லை
என்பதில்
மிகவும்
உறுதியாக
இருந்தார்.
அவருக்கு
ஒரே
ஆதரவு
அவரது
மகன்
எழில்தான்.

சீரியலில்
மாறிய
காட்சிகள்
விவாகரத்து
கொடுத்துவிட்டு
மீண்டும்
வீட்டிற்கு
வந்த
பாக்கியா,
துணிமணிகளை
எடுத்துக்
கொண்டு
நடையை
கட்டுவார்
என்று
எதிர்பார்த்த
ரசிகர்களுக்கு
மீண்டும்
அதிர்ச்சி.
அவர்
பெட்டியில்
எடுத்து
வைத்தது
தன்னுடைய
கணவன்
கோபியின்
துணிகள்.
இதையடுத்து
சீரியலில்
காட்சியும்
மாறியது.
கோலங்களும்
மாறியது.

வீட்டை
விட்டு
வெளியேறிய
கோபி
கோபியின்
அப்பா,
வீட்டை
விட்டு
போக
வேண்டியது
பாக்கியா
இல்லை
என்றும்
கோபிதான்
என்றும்
அவர்,
கோபியை
வீட்டை
விட்டு
வெளியேற்றிவிட்டார்.
தொடர்ந்து
தான்
அந்த
வீட்டை
கட்டுவதற்காக
செலவிட்ட
பணத்தை
கோபி
கேட்க,
அதை
தான்
ஒரு
வருடத்தில்
தருவதாக
சவாலை
ஏற்கிறாள்
பாக்கியா.

அடிப்படைகூட
கிடைக்காத
பாக்கியா
தொடர்ந்து
இன்றைய
எபிசோடில்,
தன்னுடைய
மகனிடம்
தான்
இத்தனை
ஆண்டுகாலம்
வாழ்ந்த
வாழ்க்கை
குறித்தும்
மனக்குறையை
பகிர்ந்து
கொள்கிறார்.
கணவனிடம்
இருந்து
கிடைக்கக்கூடிய
அடிப்படையான
விஷயம்
அன்பு.
அது
தனக்கு
இதுவரை
கிடைக்கவில்லை
என்றும்
தன்னை
ஒரு
வேலைக்காரியாகவே
கோபி
பயன்படுத்திக்
கொண்டதுகுறித்தும்
குமுறலுடன்
கொட்டித்
தீர்க்கிறார்.

அம்மாவை
திட்டிய
செழியன்
இதனிடையே
தன்னுடைய
அம்மா
வில்லத்தனம்
செய்து
தன்னுடைய
அப்பாவை
வீட்டை
விட்டு
வெளியேற்றியதாகவும்,
அதனால்
இந்த
குடும்பத்தின்
சுமை
தன்மீது
விழுந்ததாகவும்
பாக்கியாவின்
மூத்த
மகன்
செழியன்
தன்னுடைய
மனைவி
ஜெனியிடம்
கோபமாக
கூறுகிறார்.
அப்படி
ஒரு
நிலை
வந்தால்
தான்
அதை
ஏற்கமாட்டேன்
என்றும்
தெரிவிக்கிறான்.

சாலையில்
தஞ்சமடைந்த
கோபி
இந்நிலையில்
வீட்டை
விட்டு
வெளியில்
வந்து
சாலையில்
தஞ்சமடையும்
கோபி,
தன்னுடைய
நண்பனிடம்
குறை
கொட்டிக்
கொள்கிறார்.
பெண்கள்
தங்களது
ஆயுதமாக
அழுகை,
அன்பு
உள்ளிட்டவற்றை
பயன்படுத்துவதாக
கூறுகிறார்.
இவ்வாறு
இன்றைய
தினம்
எபிசோட்
நிறைவடைந்துள்ளது.