எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் வாடிக்கையாளரா நீங்க.. இனி உங்க EMI அதிகரிக்கலாம்..!

எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் அதன் கடன்களுக்கான வட்டி விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.

அதிகரிக்கப்பட்டுள்ள இந்த வட்டி விகிதமாது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ்-ன் இந்த முடிவானது ரிசர்வ் வங்கியின் ஆகஸ்ட் மாத வட்டி அதிகரிப்பு நடவடிக்கைக்கு பிறகு வந்துள்ளது.

இதனால் இனி எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் வாடிக்கையாளர்களுக்கும், இனி இணையவிருக்கும் புதிய வாடிக்கையாளார்களும் அதிக வட்டி விகிதத்தினை செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படலாம். இதன் காரணமாக உங்களது மாத தவணை தொகையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எலான் மஸ்க் இந்திய நண்பர் உடன் திடீர் சந்திப்பு.. போட்டோ பலே..!

பிரைம் லெண்டிங் ரேட்

பிரைம் லெண்டிங் ரேட்

வட்டி விகிதம் அதிகரிக்கப்படிருந்தாலும், வீடுகளுக்கான தேவையானது அதிகரிக்கலாம் என இந்த ஹவுஸிங் பைனான்ஸ் எதிர்பார்க்கிறது.

எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ்-ன் புதிய அப்டேட்-க்கு பிறகு, எல்ஐசியின் ஹவுஸிங் பிரைம் லெண்டிங் ரேட் (LHPLR) ஆனது, 15.80% ஆனது ஆகஸ்ட் 22, 2022 முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஏன் என்ன காரணம்?

ஏன் என்ன காரணம்?

இந்த வட்டி அதிகரிப்பு குறித்து எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ்-ந் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமானா ஒய் விஸ்வநாத கவுட் கூறுகையில், ஆகஸ்ட் 5ம் தேதி ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்ட நிலையில், வங்கிகள் கடனுக்கான விகிதத்தினை உயர்த்த ஆரம்பித்துள்ளன. குறிப்பாக வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதங்கள் உயர ஆரம்பித்துள்ளன.

வட்டி விகிதம்
 

வட்டி விகிதம்

எல்ஐசி-யின் ஹவுஸிங் பைனான்ஸ்லின் புதிய விகிதத்தின் படி, வீட்டுக் கடன் விகிதங்கள் 8%ல் இருந்து ஆரம்பிக்கிறது. இது முன்னதாக 7.50% ஆக இருந்தது.

எல்ஐசி-யின் ஹவுஸிங் பைனான்ஸ் தளத்தின் படி, 50 லட்சம் ரூபாய்க்கான கடனுக்கான வட்டி விகிதம், 8.05% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிபில் ஸ்கோர் எப்படியிருக்கணும்

சிபில் ஸ்கோர் எப்படியிருக்கணும்

இதே 50 லட்சத்திற்கும் மேல் 2 கோடி ரூபாய்க்குள்ளான கடனுக்கு 8.25% ஆகவும் உள்ளது. இது சம்பளதாரர்கள் மற்றும் தொழில் வல்லுனர்களுக்கும் பொருந்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விகிதமானது கடன் மதிப்பெண் 700 அல்லது அல்லது அதற்கு மேலான விகிதத்திற்கு பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடன் மதிப்பெண் 600 - 699-க்குள்

கடன் மதிப்பெண் 600 – 699-க்குள்

உங்களது கடன் மதிப்பெண் 600 – 699-க்குள் இருந்தால், 50 லட்சம் ரூபாய்க்குள்ளான கடனுக்கு வட்டி விகிதம் 8.30% ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.

இதே 50 லட்சத்திற்கும் மேல் 2 கோடி ரூபாய்க்குள்ளான கடனுக்கு 8.50% ஆகவும் உள்ளது.

கடன் மதிப்பெண் 600-க்குள்

கடன் மதிப்பெண் 600-க்குள்

உங்களது கடன் மதிப்பெண் 600-க்குள் இருந்தால், 50 லட்சம் ரூபாய்க்குள்ளான கடனுக்கு வட்டி விகிதம் 8.75% ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.

இதே 50 லட்சத்திற்கும் மேல் 2 கோடி ரூபாய்க்குள்ளான கடனுக்கு 8.95% ஆகவும் உள்ளது.

கடன் மதிப்பெண் 101 - 200-க்குள்

கடன் மதிப்பெண் 101 – 200-க்குள்

உங்களது கடன் மதிப்பெண் 101 – 200-க்குள் இருந்தால் அல்லது NTC ஆக இருந்தால், 50 லட்சம் ரூபாய்க்குள்ளான கடனுக்கு வட்டி விகிதம் 8.70% ஆக பட்டியலிடப்பட்டுள்ளது.

இதே 50 லட்சத்திற்கும் மேல் 1 கோடி ரூபாய்க்குள்ளான கடனுக்கு 8.90% ஆகவும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

LIC housing finance hiked prime lending rate by 50 basis points: EMIs may go to up

LIC housing finance hiked prime lending rate by 50 basis points: EMIs may go to up/எல்ஐசி ஹவுஸிங் பைனான்ஸ் வாடிக்கையாளரா நீங்க.. இனி உங்க EMI அதிகரிக்கலாம்..!

Story first published: Monday, August 22, 2022, 19:56 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.