ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பெரியம்மை நோய் காரணமாக இதுவரை 6 லட்சத்து 12 ஆயிரத்து 841 கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் நோய் பாதித்த 25,986 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இந்நிலையில் பெரியம்மை பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘லும்பி தோல் நோய் பசுக்கள் மற்றும் எருமைகளை பெரிதும் பாதிக்கின்றன. கால்நடைகளின் தோலில் கட்டிகள் போன்று ஏற்படுகின்றன.
இதன் காரணமாக அவை இறக்க நேரிடுகின்றது. இதுவரை மாநிலத்தில் 25ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. பெரியம்மை பரவுவதை தடுப்பதற்கான மருந்துகள் மற்றும் தடுப்பூசியை வாங்குவதற்கு முதல்வர் அசோக் கெலாட் ரூ.30 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளார்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.