டாடா முதலீட்டாளர்கள் அதிர்ச்சி.. ஓரே நாளில் 7 சதவீதம் சரிவு..!

டாடா குழுமத்தின் முக்கிய ரீடைல் விற்பனை நிறுவனமான டிரெண்ட் லிமிடெட் பங்குகள் திங்களன்று யாரும் எதிர்பார்க்காத வரையில் சுமார் 7 சதவீதத்திற்கும் மேலாகச் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

இன்றைய வர்த்தகத்தில் டிரெண்ட் பங்குகள் 1,299.55 ரூபாய் என்ற இன்ட்ராடே குறைந்தபட்ச அளவீட்டை எட்டியது. வாரத்தின் முதல் நாள் வர்த்தக முடிவில் டிரெண்ட் பங்குகள் 6 சதவீதம் குறைந்து 1,313.85 ரூபாய் அளவில் முடிந்தது.

டிரெண்ட் பங்குகள் மூன்றாவது நாளாகத் தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்தச் சரிவுக்கு என்ன காரணம்..? டாடா குழுமத்தைச் சேர்ந்த டிரெண்ட் நிறுவனத்தின் வரலாறு என்ன..? அதன் வர்த்தகம் என்ன..?

இந்த 3 பங்குகள் உங்களிடம் இருக்கா.. இல்லாட்டி வாங்கி வைங்க.. 15% லாபம் கொடுக்கலாம்!

டாடா குழுமம்

டாடா குழுமம்

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக விளங்கும் டாடா குழுமம் 1998 ஆம் ஆண்டில் அழகுசாதனப் பொருட்கள் வர்த்தகத் துறையில் இருந்து மொத்தமாக வெளியேற முடிவு செய்த நிலையில் டாடா குழுமத்தின் Lakmé நிறுவனத்தில் டாடா வைத்திருந்த 50% பங்குகளை ஹிந்துஸ்தான் யூனிலீவர்-க்கு சுமார் 200 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது.

Lakmé டூ Trent

Lakmé டூ Trent

இந்த விற்பனையின் மூலம் பெற்ற பணத்தில் இருந்து தான் டாடா குழுமம் Trent என்னும் நிறுவனத்தை உருவாக்கியது. மேலும் Lakmé இன் அனைத்து பங்குதாரர்களுக்கும் Trent இல் பங்குகள் வழங்கப்பட்டன.

ட்ரெண்ட் லிமிடெட்
 

ட்ரெண்ட் லிமிடெட்

டாடா குழுமத்தின் முக்கியமான ட்ரெண்ட் லிமிடெட் என்பது சில்லறை விற்பனை நிறுவனமாக விளங்கும் மும்பையைத் தளமாகக் கொண்டு நாடு முழுவதும் இயங்கி வருகிறது. 1998 இல் தொடங்கப்பட்ட ட்ரெண்ட் ஆடை விற்பனை நிறுவனமான வெஸ்ட்சைட், லேண்ட்மார்க், Zudio ஆகிய பிராண்டுகளின் ரீடைல் வர்த்தகம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

 ட்ரெண்ட் பங்குகள்

ட்ரெண்ட் பங்குகள்

இந்நிலையில் டிரென்ட் சந்தை மதிப்பு கடந்த வாரம் முதல் முறையாக 50,000 கோடியை தாண்டியது, ஆனால் இப்பங்குகள் 3 நாளாகத் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில் இந்நிறுவனத்தின் சந்தை மூலதனம் தற்போது 46,705.72 கோடி ரூபாயாக உள்ளது. 2022 ஆம் ஆண்டில் இதுவரை சுமார் 24.70 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.

லாபம், வருவாய்

லாபம், வருவாய்

இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டின் 2022-23 முதல் காலாண்டில் ரூ.115 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கோவிட்-19 தொற்றுக் காரணமாக இந்நிறுவனம் ரூ.138 கோடி இழப்பை அறிவித்தது. இதேபோல் முதல் காலாண்டில் டிரென்ட் நிறுவனத்தின் வருவாய் ரூ.492 கோடியிலிருந்து ரூ.1,803 கோடியாக உயர்ந்துள்ளது.

வெஸ்ட்சைட் மற்றும் ஜூடியோ

வெஸ்ட்சைட் மற்றும் ஜூடியோ

வெஸ்ட்சைட் மற்றும் ஜூடியோ ஆகியவை நிறுவனத்தின் லாபகரமான வர்த்தகப் பிரிவுகளாக உள்ளது. இதனால் ட்ரெண்ட் நிறுவனத்தில் பயப்படும் அளவிற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்தப் பங்கு சரிவு டிரெண்ட் பங்குகள் புதிய வரலாற்று உச்சத்தைத் தொட்ட பின்பு ஏற்பட்ட சரிவாகும்.

Buy on Dips பார்மூலா

Buy on Dips பார்மூலா

இது பெரும்பாலும் லாபம் பார்க்க முதலீட்டாளர்கள் விற்பனை செய்வதால் ஏற்படும் சரிவாகும். இதன் மூலம் மேலும் 8-10 சதவீத வரையில் திருத்தம் செய்யப்படலாம். இதன் மூலம் முதலீட்டாளர்கள் நீண்ட கால அடிப்படையில் Buy on Dips பார்மூலாவை பயன்படுத்தி டிரெண்ட் பங்குகளில் முதலீடு செய்யலாம் எனச் சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata Group stock fall 7 percent today; what experts say, can investors Buy on Dips

Tata Group stock fall 7 percent today; what experts say, can investors Buy on Dips டாடா குழும நிறுவன பங்குகள்.. ஓரே நாளில் 7 சதவீதம் சரிவு..!

Story first published: Monday, August 22, 2022, 21:36 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.