கேரளாவின் நெடும்பாசேரி விமான நிலையத்தில், 60 கோடி ரூபாய் மதிப்பிலான உயர் ரக போதைப் பொருளை கடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
சிம்பாப்வேயில் இருந்து தோஹா வழியாக கொச்சி வந்தடைந்த விமானத்தில் வந்த பாலக்காட்டைச் சேர்ந்த முரளிதரன் நாயர், அங்கிருந்து டெல்லி செல்லும் விமானத்தில் ஏற முயன்றுள்ளார்.
அப்போது அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டதில் 30 கிலோ உயர் ரக போதை பொருள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.