வைரலான இளம்பெண் பிரதமரின் பார்ட்டி வீடியோ: வெளியான போதைப்பொருள் பரிசோதனை முடிவுகள்!


இணையத்தில் வைரலான பின்லாந்து பிரதமரின் பார்ட்டி வீடியோ.

போதைப்பொருள் பரிசோதனையில் எதிர்மறை முடிவுகள்.

பின்லாந்து பிரதமர் சன்னா மரின் நண்பர்களுடன் பார்ட்டியில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் கடந்த வாரம் வெளியானதையடுத்து அவர் எடுத்துக் கொண்ட போதைப்பொருள் பரிசோதனையில் எதிர்மறை முடிவுகள் வந்துள்ளது.

பின்லாந்தின் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக சன்னா மரீன்(36) பதவி வகித்து வருகிறார், இவர் உலகின் மிக இளவயது பிரதமரும் ஆவார்.

பின்லாந்து பிரதமர் சன்னா மரின் (36) சமீபத்தில் நண்பர்களுடனான பிரைவேட் பார்ட்டியில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த விருந்தில் போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மைக்கோ கர்ணன் சன்னா மரினை குற்றம் சாட்டியுள்ள நிலையில், அந்தக் குற்றச்சாட்டிற்கு மரீன் மறுப்பு தெரிவித்தார்.

மேலும் தான் ஒருபோதும் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்றும், தான் கலந்துகொண்ட விருந்திலும் அவ்வாறு யாரும் செய்வதை பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை தன்னை போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்படுத்திக் கொண்டதாகவும் தெரிவித்து இருந்தார்.

வைரலான இளம்பெண் பிரதமரின் பார்ட்டி வீடியோ: வெளியான போதைப்பொருள் பரிசோதனை முடிவுகள்! | Finland Sanna Marin Drugs Get Tests Negative

கூடுதல் செய்திகளுக்கு: ஜிம்பாப்வே அணியை சிதறடித்த சுப்மன் கில்…தொடரை கைப்பற்றியது இந்திய அணி

இந்தநிலையில் பின்லாந்து பிரதமர் சன்னா மரின் எடுத்துக் கொண்ட போதைப்பொருள் பரிசோதனையில் எதிர்மறையான முடிவுகளே வந்து இருப்பதாகவும், அவர் தடை செய்யப்பட்ட எத்தகைய போதைப் பொருள்களையும் பயன்படுத்தவில்லை என்றும் பின்லாந்தின் பிரதமர் அலுவலகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.