கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சுவாமிகளுக்கு ஏராளமான நகைகள் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும் முதன் முதலாக கடந்த 1955 ஆம் ஆண்டு கணக்கீடு செய்யப்பட்டது.
அதன் பிறகு பல்வேறு கால கட்டங்களில் நகைகள் சரிபார்ப்பு ஆய்வு நடந்த வந்த நிலையில், கடைசியாக கடந்த 2005 ஆம் ஆண்டு மதிப்பீடு ஆய்வு செய்யப்பட்டது. இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று மீண்டும் நகை சரிபார்ப்பு ஆய்வு துவங்கியுள்ளது. இதில் 6 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து நடராஜர் கோயில் தீட்சிதர்களின் வழக்கறிஞர் சந்திரசேகர் தெரிவிக்கையில்,
கடந்த 1956 ஆம் ஆண்டு முதன் முதலாக நகைகள் சரிபார்ப்பு ஆய்வுக்கு ஒத்துழைத்துள்ளோம். தீட்சிதர்களின் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றை நிரூபிக்கவே நகை சரிபார்க்க ஆய்வுக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளோம்.
நடராஜர் கோயில் பற்றி சமூகத்தில் பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதை தடுக்கவே இனி வரும் காலங்களில் அனைத்தையும் நாங்களே ஆடிட்டிங் செய்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை வைத்து அவற்றை சரி பார்த்து வெளியிட முடிவு செய்துள்ளோம். என்று அவர் கூறினார்.