அந்த தகவல் உண்மையில்லை…த்ரிஷா பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தாய் உமா

சென்னை : சென்னை : தென்னிந்திய திரையுலகில் 20 ஆண்டுகாலமாக ஹீரோயினாக நடித்து வருபவர் த்ரிஷா. கிட்டதட்ட அனைத்து டாப் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார் த்ரிஷா.

படங்களில் நடிப்பதுடன் சமூக நலனுக்காக செயல்படும் சில என்.ஜி.ஓக்களுக்கு விளம்பர தூதராகவும் த்ரிஷா செயல்பட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் த்ரிஷாவை 36 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்களிடம் இவருக்கு இருக்கும் மவுசு குறையவில்லை.

கடைசியாக பரமபத விளையாட்டு என்ற படத்தில் த்ரிஷா நடித்திருந்தார். தற்போது இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன், சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதில் பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30 ம் தேதியும், சதுரங்க வேட்டை 2 அக்டோபர் 7 ம் தேதியும் ரிலீசாக உள்ளன.

குந்தவைக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

இந்திய அளவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமான பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா, குந்தவை பிராட்டியாக நடித்துள்ளார். இவரின் நடிப்பை பார்க்க தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அரசியலில் குதிக்கிறாரா த்ரிஷா?

அரசியலில் குதிக்கிறாரா த்ரிஷா?

ராம் முதல் பாகம், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், தி ரோட் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் த்ரிஷா.மலையாளம், தமிழில் பிஸியாக நடித்து வரும் த்ரிஷா, விரைவில் அரசியலில் குதிக்க போவதாக மீடியாக்களில் தகவல் பரவி வருகிறது.அதுவும் தேசிய கட்சி ஒன்றில் இணைய போவதாகவும், இதற்காக த்ரிஷாவின் திரையுலக நண்பரான விஜய் தான் அவருக்கு ஊக்கமளித்து வருவதாகவும் தகவல் பரவியது.

 உமா கிருஷ்ணன் தந்த விளக்கம்

உமா கிருஷ்ணன் தந்த விளக்கம்

தற்போது த்ரிஷாவின் தாய் உமா கிருஷ்ணன், தனது மகள் அரசியலுக்கு வருவார் என்ற வதந்தியை மறுத்துள்ளார். த்ரிஷா தனது நடிப்பில் பிஸியாக இருப்பதாகவும், விரைவில் அனைத்து இந்திய மொழிகளிலும் இன்னும் பல படங்களில் கமிட்டாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். எவர்கிரீன் நடிகை எந்த நேரத்திலும் தனது கெரியரை மாற்ற மாட்டார் என்பதையும் உறுதி பட தெரிவித்து யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் உமா கிருஷ்ணன்.

தளபதி 67 லும் நடிக்கிறாரா?

தளபதி 67 லும் நடிக்கிறாரா?

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா 14 வருடங்களுக்கு பிறகு நடிக்கவிருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது. தளபதி 67 படம் பற்றி அறிவிப்பு கூட இன்னும் வெளியிடப்படாத நிலையில், லோகேஷ் கனகராஜ் த்ரிஷாவின் ட்விட்டர் பக்கத்தை ஃபாலோ செய்து வருவதால், அவர் தளபதி 67 ல் நடிக்கிறார் என கிட்டதட்ட உறுதியாக கூறி வருகின்றனர்.

தளபதி 67 எப்போ?

தளபதி 67 எப்போ?

ஆனால் சினிமா வட்டார தகவல்களின் படி தளபதி 67 படம் தற்போது வரை ப்ரீ ப்ரொடக்ஷன் நிலையிலேயே இருந்து வருவதாகவும், படத்தின் இறுதிக்கட்ட கதையை முடிவு செய்யும் பணியில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அக்டோபர் மாதத்திற்கு பிறகே தளபதி 67 வேலைகள் துவங்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.