கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்தும், விநாயகர் சிலை வைப்பது, ஊர்வலம் செல்வது குறித்த ஆலோசனை கூட்டம் ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நேற்று நடைபெற்றது. கும்மிடிப்பூண்டி காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்திற்கு கும்மிடிப்பூண்டி காவல் துணை கண்காணிப்பாளர் கிரியோ சக்தி சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டாார். இந்நிகழ்வில் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளை சேர்ந்த பல்வேறு அமைப்புகள், வழக்கமாக விநாயகர் சதுர்த்தியை ஒட்டி சிலை வைத்து விழா எடுப்பவர்கள் கலந்துக் கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய டிஎஸ்பி கிரியோ சக்தி, `விநாயகர் சதுர்த்தி விழா நடத்துபவர்கள் விழாவை சிறப்பாக நடத்த திட்டமிடும் அதே நிலையில் விழாவை அமைதியாகவும் எவ்வித அசம்பாவிதங்களுக்கும் இடம் தராமல் நடத்துவதும் அவசியம் என்பதால் இதில் விழா அமைப்பாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். விநாயகர் சிலை வைப்பவர்கள் 10 அடி உயரத்திற்கு மேல் சிலை வைக்கக் கூடாது. சிலை வைத்து வழிபடும் தற்காலிக வழிபாட்டு இடத்தில் இருபுறத்திலும் வெளியே செல்லும் வகையில் வழி அமைப்பதோடு, சிலை இருக்கும் பகுதியில் முதலுதவி உபகரணங்கள் வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், பிற மத வழிபாட்டு தலங்களின் அருகில் சிலை வைத்து சச்சரவிற்கு இடம் தரக் கூடாது’என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.