பணஜி : ஹரியானாவைச் சேர்ந்த பா.ஜ., பிரமுகரும், நடிகையுமான சோனாலி போகத், 42, கோவாவில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.ஹரியானாவைச் சேர்ந்த சோனாலி போகத், ஹிந்தி சினிமா, ‘டிவி’ நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார். இவர், சமூக வலைதளத்திலும் பிரபலமானவர். ‘பிக் பாஸ்’ எனப்படும் ‘டிவி’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தார்.
பா.ஜ.,வில் இணைந்த அவர், 2019 சட்டசபை தேர்தலில் ஆதம்புர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கோவாவுக்கு தன் ஊழியர்களுடன் சென்ற அவர், ஹோட்டலில் இருந்தபோது, நேற்று முன்தினம் இரவு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்; மாரடைப்பு ஏற்பட்டு அவர் இறந்ததாக கூறப்படுகிறது.
அவருடைய மறைவுக்கு, பா.ஜ.,வைச் சேர்ந்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், மாநில தலைவர் ஓ.பி.தன்கர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.இவருடைய கணவர், சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார்; ஒரு மகள் உள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement