ஜப்பானியத் தூதுவர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கும் ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் (Mizukoshi Hideaki) இடையிலான சந்திப்பொன்று, இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஜப்பானியப் பேரரசர் ஹிரோனோமியா நரஹிட்டோவின் (Hironomia Narahito) வாழ்த்துகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்குத் தெரிவித்த ஜப்பானியத் தூதுவர், ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அவர்கள், “சென்பிரான்சிஸ்கோ சமாதான மாநாட்டில்” உரையாற்றி, 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ஜப்பான் தூதரகமும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள விசேட நிகழ்ச்சி, செப்டெம்பர் மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் அது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2022-08-24

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.