Google முதல் Apple வரை பயனர்களின் லொகேஷன் & இதர அந்தரங்க டேட்டாவை வேவு பார்க்கும் டாப் 5 நிறுவனங்கள்!

சில நாட்களுக்கு முன்பு ட்விட்டர் பயனர் ஒருவர் இந்திய ரயில்வேயின் அதிகாரபூர்வ வலைதளத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அதில் ஒரு சில குழந்தைகள் பார்க்க கூடாத அடல்ட் விளம்பரங்கள் வருவதை சுட்டி காட்டி இந்திய ரயில்வேயை விமர்சனம் செய்து பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதற்கு பதிலளித்த இந்திய ரயில்வே அவரின் ட்விட்டர் பதிவை டேக் செய்து அவரவரின் தேடுதல் வரலாறை கொண்டே அவரவருக்கு என்ன விளம்பரம் காட்ட வேண்டும் என்று கூகுள் முடிவு செய்யும் என்று பதிவிட்டிருந்தனர்.

அந்த சமயத்தில் அது பலருக்கும் பெரும் காமெடி கண்டெண்ட்டாக மாறியது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே அதற்கு பின்னால் உள்ள ஆபத்துக்கள் குறித்து விவாதித்தனர்.சமீபத்திய ஆய்வு முடிவுகளும் அந்த ஆபத்தை உறுதி படுத்தியுள்ளன. சமூக வலைதளங்கள் மட்டும் கூகுள் போன்ற தேடு தளங்கள் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் ஆபத்துதான் அது.

ஏன் இது ஆபத்து?
பொதுவாக ஸ்மார்ட் போன்கள் அல்லது சிஸ்டம் மூலமாக தேடு தளங்கள் அல்லது சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரிடம் குறிப்பிட்ட தளம் அல்லது செயலி ஒரு சில டேட்டாக்களை பார்க்க பயன்படுத்த அனுமதி கேட்கும். பலரும் கூகுளில் குக்கீஸ் பயன்படுத்த அனுமதி கேட்பதை கவனித்திருப்பீர்கள். நம்மில் பலரோ அது என கேட்கிறது என்று படிக்கவெல்லாம் நேரம் இல்லாமல் எல்லாவற்றிற்கும் ஓகே கொடுத்துவிடுவோம்.

இதனால் குறிப்பிட்ட தளம் அல்லது செயலி மூலமாக உங்களின் தனிப்பட்ட தரவுகள் முதல் அன்றாட செயல்பாடுகள் வரை கண்காணிக்க முடியும். பெரும்பாலும் இந்த நிறுவனங்கள் அதை உங்கள் தேடல் சார்ந்த , உங்கள் பழக்கவழக்கங்கள் சார்ந்த விளம்பரங்களை காட்ட அல்லது வியாபாரம் சார்ந்த யுக்திகளை கடைபிடிக்க மட்டுமே பயன்படுத்துகின்றன.

ஆனால் அன்றாட செயல்பாடுகளை கண்காணிப்பது, லொக்கேஷன் சார்ந்த தரவுகளை சேகரிப்பது போன்றவை தனி நபரின் தனியுரிமையை பாதிப்பது போல் இருக்கிறது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தரவுகளை சேகரிப்பதில் முன்னணி மற்றும் முக்கிய நிறுவனங்களை பட்டியலிட்டு கூறியிருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.StockApss.com நடத்திய சமீபத்திய ஆய்வில் கூகுள் நிறுவனத்திற்கு அடுத்து ட்விட்டர் , அமேசான்,முகநூல் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் அதிகமாக பயனாளர்களின் தரவுகளை சேமித்து வைத்து கொள்வதாக தெரிய வந்துள்ளது.

இதில் ஆப்பிள் நிறுவனம் மட்டுமே தங்களுக்கு தேவையான ஒரு சில தகவல்களை பயனாளர்களிடம் இருந்து பெறுகிறது. ஆனால் மற்ற நிறுவனங்கள் தங்கள் தேவைக்கு அதிகமாக பயனர்களின் லொக்கேஷன் உட்பட பல்வேறு அந்தரங்க விஷயங்களை சேமிப்பதாக கூற படுகிறது.

குறிப்பாக கூகுள் 39 வகையான தரவுகளை பயனாளர்களிடமிருந்து சேமித்து வைத்து கொள்கிறது. இதனால் இந்த நிறுவனங்களின் சர்வர்களை எதிர்காலத்தில் யாராவது ஹேக் செய்தால் அது உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது.

– சுபாஷ் சந்திரபோஸ்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.