என்னை அப்படிக் கூப்பிடாதீங்க ப்ளீஸ்.. ரசிகர்களிடம் கெஞ்சிய நித்யா மேனன்!

சென்னை : நடிகர் தனுஷ், நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது திருச்சிற்றம்பலம்.

Thiruchitrambalam Movie Review | Yessa ? Bussa ? | திருச்சிற்றம்பலம் | Dhanush|*Review

இந்தப் படத்தில் ஷோபனா என்ற கேரக்டரில் தனுஷிற்கு பிரெண்டாக நடித்து அசத்தியிருந்தார் நித்யா மேனன்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் கேள்வி பதில் செஷனில் ரசிகர்களிடம் பேசிய நித்யா மேனன் பல விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார்.

திருச்சிற்றம்பலம் படம்

திருச்சிற்றம்பலம் படம்

நடிகர் தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 18ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது திருச்சிற்றம்பலம். இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை ரசிகர்களிடையே பெற்றுள்ளது. இந்நிலையில் படம் தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

ஆண் -பெண் நட்பு

ஆண் -பெண் நட்பு

இந்தப் படத்தில் ஆண் -பெண் நட்பு மையப்படுத்தியுள்ளது. ஒரு ஆண்மகனுக்கு எதுவுமே சரியாக அமையவில்லை என்றாலும் சிறப்பான நட்பு, அதுவும் ஒரு பெண் தோழியாக கிடைத்தால் அதன்மூலம் அவன் எதையும் சாதிக்க முடியும், அவனது வாழ்க்கையில் அனைத்துமே சாத்தியமாகும் என்பதை இந்தப் படம் ஸ்டோரி லைனாக கொண்டு வெளியாகியுள்ளது.

ஷோபனா கேரக்டரில் நித்யா மேனன்

ஷோபனா கேரக்டரில் நித்யா மேனன்

படத்தில் பிரகாஷ் ராஜ், பாரதிராஜா உள்ளிட்டவர்களும் முக்கியமான ரோல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர். குறிப்பாக படத்தில் ஷோபனா என்ற கேரக்டரில் நடித்துள்ள நித்யா மேனன், தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். மற்ற இரு நடிகைகளையும் ஓரம் கட்டியுள்ளார். அவருக்குத்தான் படத்தில் பிரதானமான கேரக்டர்.

நித்யா மேனனின் மிரட்டலான நடிப்பு

நித்யா மேனனின் மிரட்டலான நடிப்பு

ஒவ்வொரு காட்சியிலும் பின்னி பெடலெடுத்துள்ளார். அவருக்கான கேரக்டரை அழகாக செய்துள்ளார் மித்ரன் ஜவஹர். இந்தப் படத்தின்மூலம் தனுஷுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார் மித்ரன். யாரடி நீ மோகினி, குட்டி என இவர்கள் முன்னதாக இணைந்து படங்களும் ஹிட்டடித்த நிலையில் தற்போது திருச்சிற்றம்பலம் படத்தையும் ஹிட் படமாக கொடுத்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் சாட்

இன்ஸ்டாகிராமில் சாட்

இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நித்யா மேனன், தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் லைவ் சாட்டில் இணைந்துள்ளார். அப்போது ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். இந்தப் படத்தின் பல விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொண்டார்.

ஷோபனா மீட்ஸ் நித்யா மேனன்

ஷோபனா மீட்ஸ் நித்யா மேனன்

ஷோபனா மீட்ஸ் நித்யா மேனன் என்ற தலைப்பில் இந்த செஷன் நடந்தது. இதில் தான் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்கவுள்ளதாகவும், தனுஷுடன் நடிக்க மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். தனுஷும் தான் எப்போது கூப்பிட்டாலும் வந்து நடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தாய் கிழவின்னு கூப்பிடாதீங்க

தாய் கிழவின்னு கூப்பிடாதீங்க

தொடர்ந்து ரசிகர்கள் அவரை தாய் கிழவி என்று கூப்பிட, அப்படி கூப்பிடாதீர்கள் என்றும் அந்தப் பெயர் தனக்கு பிடிக்காது என்றும் நித்யா மேனன் கூறியுள்ளார். கடந்த 6 நாட்களில் இந்தப் படம் 60 கோடி ரூபாய்களுக்கும் மேல் வசூல் மழை பொழிந்துள்ளது. மேலும் இந்த வார இறுதிக்குள் இதன் வசூல் 80 கோடி ரூபாயை தாண்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.