இராணுவத் தளபதி, யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

24 வது இராணுவத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு வெள்ளிக்கிழமை (26) தனது முதல் விஜயத்தினை மேற்கொண்டதுடன் அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக குடாநாட்டில் இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட சமூக சார் நலத்திட்டங்களை திறந்து வைப்பதற்காக வருகை தந்த இராணுவத் தளபதி, இராணுவ மரபுகளுக்கமைய இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
பலாலி விமான நிலையத்தை வந்தடைந்த அவரை, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் சந்தன விஜயசுந்தர அவர்கள் அன்புடன் வரவேற்று யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு தளபதிக்கு நுழைவாயிலில் வண்ணமயமான பாதுகாப்பு காவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு இராணுவ சம்பிரதாயமான அணிவகுப்பு மரியாதையையும் வழங்கப்பட்டது.

பின்னர், வருகை தந்த நாட்டின் மிகப் பெரிய சேவை வழங்குநரின் தளபதி லெப்டினன் ஜெனரல் விகும் லியனகே அவர்கள் மைதானத்தில் கஜபா படையணியின் படையினரால் வழங்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை மீளாய்வு செய்தார்.

அதன் பின்னர், தனது விஜயத்தின் அடையாளச் சின்னமாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக வளாகத்திற்குள் மா மரக்கன்று ஒன்றையும் இராணுவத் தளபதி நட்டார். மேலும் இராணுவத் தளபதி இந்த சிறப்பு நாளின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் அந்தந்த சிரேஷ்ட அதிகாரிகளுடன் குழு புகைப்படங்கள் எடுக்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக சினிமா மண்டபத்தில் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான தனது உத்தியோகபூர்வ உரையின் போது, பாதுகாப்பு, அவசரநிலை, தேசத்தைக் கட்டியெழுப்புதல், சமூக சேவை என எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு தொழில்முறை அடையாளமாக இராணுவத்தின் முக்கியத்துவத்தை தளபதி எடுத்துரைத்தார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர், ஒரு சிப்பாயின் கண்ணாடியாக விளங்கும் அந்த தொழில்முறை தரங்களை அர்ப்பணிப்பு மற்றும் உயர் தரமான ஒழுக்கத்துடன் பேணுவது நமது கடமையாகும் என குறிப்பிட்டதுடன் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் திறன்களில் நன்கு தேர்ச்சி பெற்ற நமது வீரர்கள் மனிதாபிமான அணுகுமுறையைக் கொண்ட ஒரு சமூகம் என்பதை இராணுவம் அதன் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து உலகிற்கு நிரூபித்துள்ளதுடன் அவர்களின் விலைமதிப்பற்ற உயிர்கள், கால்கள் இழப்பில் நமது தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் ஒற்றையாட்சி அந்தஸ்தை அச்சமின்றி பாதுகாத்துள்ளது என குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இராணுவத்தின் அங்கம் வகிக்கும் நீங்கள், அதன் நலன்களை எப்பொழுதும் பாதுகாக்க வேண்டும் என்பதுடன், நாட்டின் அரசியலமைப்பை நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என நினைவு கூர்ந்தார்.

அவரின் உரையின் இறுதியில், யாழ்ப். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர அவர்கள் அனைத்து படையினர் சார்பாக, அன்றைய பிரதம அதிதிக்கு அடையாள நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியதுடன், படையினரைச் சந்திப்பதற்காக அவர் மேற்கொண்ட விஜயத்தையொட்டி தளபதியை பாராட்டினார்.

அன்றைய விஜயத்தின் போது அனைத்துப் படைப்பிரிவு தளபதிகள், பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

www.army.lk/ta

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.