டாடாவின் இந்தியன் ஹோட்டல்ஸ் கோ லிமிடெட்.. வேற லெவல் இலக்கு!

டாடா குழுமத்தின் விருந்தோம்பல் நிறுவனமான இந்தியன் ஹோட்டல்ஸ் கோ லிமிடெட், 2025 ம் ஆண்டுக்குள் மொத்தம் 300 ஹோட்டல்களை இலக்காக கொண்ட நிறுவனமாக மாற்றும் நடவடிக்கையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியன் ஹோட்டல்ஸ் கோ லிமிடெட் நிறுவனம் தற்போது 242 ஹோட்டல்களை கொண்டுள்ளது என்பதும், இதில் 61 ஹோட்டல்கள் வளர்ச்சியில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றில் மொத்தம் 29,000 அறைகளைக் கொண்ட தாஜ், செலிக்யூஷன்ஸ், விவாண்டா மற்றும் ஜிஞ்சர் ஆகிய ஹோட்டல்களும் அடங்கும்

விமானத்தில் இனி இண்டர்நெட் சேவை.. டாடா-வின் புதிய கூட்டணி..!

 டாடா குழுமம்

டாடா குழுமம்

டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்தியன் ஹோட்டல்ஸ் கோ லிமிடெட் நிறுவனமும் கணிசமான வாடிக்கையாளர்களை கொண்டு மிகப்பெரிய வளர்ச்சியை கண்டு வருகிறது.

மாதம் இரண்டு ஹோட்டல்கள்

மாதம் இரண்டு ஹோட்டல்கள்

கடந்த 24 மாதங்களில், ஒவ்வொரு மாதமும் இரண்டு ஹோட்டல் கையொப்பங்களுடன் இந்தியன் ஹோட்டல்ஸ் கோ லிமிடெட் வேகமாக விரிவடைந்து வருகிறது என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான புனித் சத்வால் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

300 ஹோட்டல் இலக்கு
 

300 ஹோட்டல் இலக்கு

2025 ஆம் ஆண்டிற்குள் 300-ஹோட்டல் போர்ட்ஃபோலியோ என்ற எங்கள் இலக்கை அடைய இந்தியன் ஹோட்டல்ஸ் கோ லிமிடெட் தயாராகி வருகிறது என்று அவர் மேலும் கூறினார். மேலும் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, நிறுவனத்தின் முதன்மையான தாஜ் ஹோட்டல் 2025ஆம் ஆண்டுக்குள் 100 ஹோட்டல்களை கொண்டிருக்கும் என்றும் தெரிவித்தார். தற்போது இந்தியாவில் தாஜ் ஓட்டலின் எண்ணிக்கை 89 ஆக உள்ளது.

அதிகரிக்க திட்டம்

அதிகரிக்க திட்டம்

மேலும் Vivanta மற்றும் SeleQtions ஆகிய பிராண்டுகள் 64 இல் இருந்து 75 ஹோட்டல்கள் என அதிகரிக்கும் என்றும், மற்றொரு பிராண்டான Ginger, தற்போது 89 இல் இருந்து 125 ஹோட்டல்களாக அதிகரிக்கும் என்று நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வடகிழக்கு பகுதி

வடகிழக்கு பகுதி

இதுகுறித்து இந்தியன் ஹோட்டல்ஸ் கோ லிமிடெட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “முக்கிய பெருநகரங்கள், மாநில தலைநகரங்கள், வளர்ந்து வரும் நகரங்கள், வணிக மையங்கள் மற்றும் பிரபலமான சுற்றுலா பகுதிகள் ஆகியவற்றில் எங்களது நிறுவனத்தின் ஹோட்டல்களை புதியதாக நிறுவ திட்டமிட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார். மேலும் வடகிழக்கு பகுதியிலும் எங்கள் கால்தடத்தை விரிவுபடுத்துவோம் என்றும் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata’s Indian Hotels On Track To Achieve 300 Hotels Mark By 2025

Tata’s Indian Hotels On Track To Achieve 300 Hotels Mark By 2025 | டாடாவின் இந்தியன் ஹோட்டல்ஸ் கோ லிமிடெட்.. வேற லெவல் இலக்கு!

Story first published: Saturday, August 27, 2022, 7:31 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.