‘2வது திருமணம் செய்து கொண்டேன்’ புது கணவருடன் எடுத்த போட்டோவுடன் முதல் கணவருக்கு மனைவி மெசேஜ்: வடமதுரை போலீசில் பரபரப்பு புகார்

வடமதுரை: வடமதுரை அருகே 2வது திருமணம் செய்து கொண்டதாக மனைவி அனுப்பிய புகைப்படத்தால், அதிர்ச்சியடைந்த முதல் கணவர் போலீசில் புகார் செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே எட்டிக்குளத்துபட்டியை சேர்ந்தவர் ஆனந்த் (30). தனியார் சோலார் கம்பெனியில் பணி புரிந்து வருகிறார். இவருக்கும் பாடியவரை சேர்ந்த வீரழகு (25) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர் தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இருவருக்கும் குழந்தைகள் இல்லாததால் தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சமீபத்தில் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற வீரழகு அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.  இந்நிலையில் ஆனந்த் வாட்ஸ் அப்பிற்கு ஒரு புகைப்படம் வந்துள்ளது.

அதில் வீரழகு வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்ட புகைப்படத்துடன், ‘‘இரண்டாவது திருமணம் செய்து கொண்ட தன்னை இனிமேல் தேடி வர வேண்டாம்’’ என அவரது மனைவி பதிவிட்டு இருந்தார். இதையடுத்து மனைவியை மீட்டுத்தரும்படி ஆனந்த் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரழகு இருக்கும் இடம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.