பாண்டியாவின் பேட்டிங்கில் கதிகலங்கிய பவுலர்கள்…பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி


5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி.


ஆட்டநாயகனாக ஹார்திக் பாண்டியா தேர்வு.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

துபாய் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்ற ஆசிய கோப்பையின் இரண்டாவது லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே, முதல் பேட்டிங்கில் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.

பாகிஸ்தான் அணியில் அதிகப்பட்சமாக முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan) 42 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 43 ஓட்டங்களை சேர்த்து இருந்தார்.

பாண்டியாவின் பேட்டிங்கில் கதிகலங்கிய பவுலர்கள்...பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி | Asia Cup2022 Ind Vs Pak2 Match India Won By5w

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம்(Babar Azam) ஃபகார் ஜமான் (Fakhar Zaman) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற, பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து 147 ஓட்டங்கள் சேர்த்தது.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்கவீரர் கே.எல். ராகுல் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழக்க, இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவும் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

இருப்பினும் இதையடுத்து களமிறங்கிய விராட் கோலி மற்றும் ஜடேஜா ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்து அணியை நிலைப்படுத்தினர்.

 விராட் கோலி 34 பந்துகளில் 3 பவுண்டரிகள் 1 சிக்ஸர்கள் என 35 ஓட்டங்களும், ஜடேஜா 29 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என 35 ஓட்டங்களும் குவித்து இருந்தனர்.

இறுதியில் இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி ஒவரில் 7 ஓட்டங்கள் தேவை என்று இருந்த நிலையில், ஜடேஜா தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இருப்பினும் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த ஹார்திக் பாண்டியா 19.4 வது பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டு இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.

கூடுதல் செதிகளுக்கு: ரஷ்ய படைகள் முழு கண்டத்தையும் ஆபத்தில் தள்ளுகிறது: டிமிட்ரோ குலேபா எச்சரிக்கை!

பாண்டியா 4 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் 17 பந்துகளில் 33 ஓட்டங்கள் அதிரடியாக குவித்ததன் மூலம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய பாகிஸ்தான் இடையிலான போட்டியில், இந்திய அணி 19.4 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கான 148 ஓட்டங்களை குவித்ததன் மூலம் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.