பொதுவாக சமீபத்திய மாதங்களாகவே முதலீட்டாளர்கள் மத்தியில் ரெசசன் அச்சம் என்பது இருந்து வருகின்றது. தற்போதிருக்கும் காலகட்டத்தில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் , பொருளாதாரம் என்னவாகுமோ? ஏற்கனவே சப்ளை சங்கிலி பாதிப்பால் பல்வேறு மூலப்பொருட்களின் விலையானது உச்சத்தில் இருந்து வரும் நிலையில், இனி என்னவாகுமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
தீபாவளிக்கு ஜியோ 5ஜி சேவை.. 2 லட்சம் கோடி முதலீடு..!

ரஷ்யா – உக்ரைன் பிரச்சனை
ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில் கடந்த ஜுன் மாதத்தில், பல்வேறு கமாடிட்டிகளின் விலையானது வரலாறு காணாத சரிவில் காணப்படுகின்றது. இது சப்ளை சங்கிலியில் ஏற்பட்ட தாக்கம், உற்பத்தி சரிவு என பல காரணிகளுக்கு மத்தியில் சரிவில் காணப்படுகின்றது.

வட்டி அதிகரிப்பு
பல நாடுகளின் மத்திய வங்கிகளும் பணவீக்கத்தினை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தினை உயர்த்தி வருகின்றன. குறிப்பாக அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், இன்னும் வட்டி விகித அதிகரிப்பு இருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தான் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க பங்கு சந்தைகள் பலத்த சரிவினைக் கண்டன. இதன் எதிரொலியாக இன்று இந்திய பங்கு சந்தையும் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றன.

கமாடிட்டிகளை வாங்குங்க
மத்திய வங்கிகளின் இந்த முடிவால் பங்கு சந்தைகள் பலத்த வீழ்ச்சியினை கண்டு வருகின்றன. இது இன்னும் வட்டி அதிகரிக்கலாம் என்ற நிலையில், பங்கு சந்தை முதலீடுகள் குறித்து கேள்விக்குறி எழுந்துள்ளது. இதன் காரணமாக கோல்டு மேன் சாச்சஸ் நிறுவனம் கமாடிட்டிகளை இந்த சமயத்தில் வாங்கி வைக்க பரிந்துரை செய்துள்ளது. இதுவும் ஒரு வகையாக அசெட் தான். இந்த சமயத்தில் முதலீடு செய்து வைக்கலாம் என தெரிவித்துள்ளது.

சிட்டி குழுமத்தின் கருத்து
மேலும் ரெசசனை பற்றி கவலைப்படுவதை விடுத்து, முதலில் கமாடிட்டிகளை வாங்குங்கள். கமாடிட்டிகள் ஒரு சிறந்த சொத்து வகுப்பாகும். சமீபத்திய மாதங்களில் கமாடிட்டிகள் அதிக எச்சரிக்கையுடன் உள்ளன. கடந்த ஜூலை மாதம் சிட்டி குழுமம் ரெசசன் பிரச்சனை எழுந்தால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 65 டாலரை எட்டலாம் என கூறியிருந்தார். ஏனெனில் மந்த நிலையால் தேவையானது சரிவினைக் காணலாம் என்றும் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விலை அதிகரிக்க வழிவகுக்கலாம்
எனினும் டாலரின் மதிப்பானது தொடர்ந்து அதிகரித்தால், அது மற்ற நாணயதாரர்களுக்கு கூடுதலாக செலவிட வழிவகுக்கலாம். ஆக இது தொடர்ந்து விலை அதிகரிக்கவே வழிவகுக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது. ஆக கமாடிட்டி பொருட்களின் விலை குறைய வாய்ப்பிருக்காது என்றும் கூறப்படுகிறது.
Buy Goldman Sachs Commodities Don’t Worry About Recession
Buy Goldman Sachs Commodities Don’t Worry About Recession/ரெசசன் பற்றிய கவலைய விடுங்க.. முதல்ல இதை செய்ங்க.. கோல்டுமேன் சூப்பர் அட்வைஸ்!