இந்திய பங்கு சந்தைகள் கடும் சரிவினைக் கண்டு வரும் நிலையில், இன்று மீண்டும் ரூபாயின் மதிப்பானது புதிய வரலாற்று சரிவினைக் கண்டுள்ளது.
இன்று காலை அமர்வில் 31 பைசா சரிவினைக் கண்டு, 80.15 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது.
இது கச்சா எண்ணெய் விலை ஏற்றம், டாலரின் மதிப்பு உச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில், ரூபாயின் மதிப்பானது மீண்டும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.
ரிலையன்ஸ் 45வது வருடாந்திர கூட்டம்.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன..?!

வரலாற்று சரிவில் ரூபாய்
ரூபாயின் மதிப்பானது இன்று காலை 80.10 ரூபாயாக தொடங்கிய நிலையில், இது இதுவரையில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 79.84 ரூபாயாக முடிவடைந்திருந்தது. கடந்த அமர்வின் முடிவு விலையுடன் ஒப்பிடும்போது 31 பைசா சரிவினைக் கண்டு, 80.15 ரூபாயாக காலை அமர்வில் சரிவினைக் கண்டுள்ளது.

டாலரின் மதிப்பு
செப்டம்பர் மாதம் வரவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் கட்டாயம் அதிகரிக்கப்படலாம் என்று கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனால் டாலரின் மதிப்பானது மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. இது ஆறு கரன்சிகளுக்கு எதிராக பார்க்கும்போது, 0.51% அதிகரித்து, 109.035 டாலராக காணப்படுகின்றது.

ஜெரோம் பவலின் பேச்சால் ஊக்கம்
அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், பணவீக்கம் 2% கீழாக குறையும் வரையில் மத்திய வங்கி தொடர்ந்து வட்டி பணவீக்க கொள்கைகளை இறுக்கும் என்ற அவரது 8 நிமிட பேச்சில், வட்டி விகிதம் அதிகரிக்கும் என்பது தெளிவானது. இதற்கிடையில் தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரிக்கும்போது அது அன்னிய முதலீடுகள் வெளியேற்றத்திற்கும் வழிவகுக்கலாம்.

மீண்டும் புதிய ஆல்டைம் லோ?
இதற்கிடையில் இன்று வெளியாகவிருக்கும் உற்பத்தி குறித்தான தரவு என பல டேட்டாக்கள் வெளியாகவுள்ளன. ஆக இதுவும் டாலரின் மதிப்பில் மிகப்பெரிய மாற்றத்தினை கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகினறது. இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தான் இந்திய ரூபாயின் மதிப்பானது இன்று மீண்டும் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. இது முன்னதாக 80.06 ரூபாயாக இருந்த நிலையில், இன்று 80.15 ரூபாய வரையில் சரிவினைக் கண்டுள்ளது.

இனியும் சரியலாம்
ரூபாயின் மதிப்பு மேற்கொண்டு சரிவினைக் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக வரவிருக்கும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு ரூபாயின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
Indian Rupee fresh low: plummets 31 paise to 80.15 against dollar in early trade
Indian Rupee fresh low: plummets 31 paise to 80.15 against dollar in early trade/வரலாறு காணாத சரிவில் ரூபாய்.. மீண்டும் ரூ.80 ஐ தாண்டி யுத்தம்.. இனி என்னவாகுமோ?