ரயில்வே தேர்வு எழுத கட்டை விரல் ரேகையை உரித்து ஆள்மாறாட்டம்: சானிடைசரால் அம்பலமான மோசடி

வதோதரா: குஜராத்தில் ரயில்வேயில் டி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த 22ம் தேதி நடைபெற்றது. வதோராவின் லஷ்மிபுரா பகுதியில் உள்ள தேர்வு மையத்தில் 600 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வில் கலந்து கொள்வதற்கு மணீஷ் குமார் என்பவர் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், தனது நண்பன் ராஜ்யகுரு குப்தாவை தனக்கு பதில் தேர்வு எழுதும்படி அவர் கேட்டுக் கொண்டார். இதற்கு சம்மதித்த ராஜ்யகுருவும் தேர்வுக்கு தயாராகி உள்ளார். தேர்வு மையத்தில் பயோமெட்ரிக் முறையில் சோதனை … Read more

சம்பளத்தை உயர்த்திய விஜய் தேவரகொண்டா

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் தேவரகொண்டா குறிப்பிடத்தக்கவர். இவர் நடித்த அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட பல படங்கள் வெற்றி பெற்றதால் தற்போது அவரை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டுகளில் படம் தயாரிக்கிறார்கள். அந்த வகையில் பூரி ஜெகநாத் இயக்கத்தில் தற்போது விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். அவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ள இந்த படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இன்று(ஆக.,25) வெளியாகி … Read more

வேட்டையாடு விளையாடு 2 ஷுட்டிங் எப்போ ஆரம்பம்…கெளதம் மேனன் கொடுத்த அப்டேட்

சென்னை : தமிழ் சினிமாவில் படம் இயக்குவதில் தனக்கென தனி ஸ்டையில் வைத்திருப்பவர் டைரக்டர் கெளதம் மேனன். பிரபலமான டைரக்டர்களில் ஒருவராக வலம் வருபவர் இவர். கெளதம் மேனன் தற்போது சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். சிம்பு, சித்தி இத்னானி நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் 15 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. வெந்து தணிந்தது காடு படத்தின் ப்ரொமோஷன் வேலைகளை … Read more

ஒப்பந்ததாரர்கள் ஓராண்டுக்கு திட்ட பணிகளை நிறுத்தினால் எல்லாம் சரியாகிவிடும்; குமாரசாமி பேட்டி

பெங்களூரு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கமிஷன் விவகாரம் ஆட்சியாளர்கள் 40 சதவீத கமிஷன் கேட்பதாக ஒப்பந்ததாரர்கள் கூறுகிறார்கள். அதற்கு ஏதாவது ஆதாரம் இருந்தால் அதுபற்றி விசாரணை நடத்துவதாக அரசு சொல்கிறது. விசாரணை நடத்தினால் ஆவணங்களை கொடுப்பதாக ஒப்பந்ததாரர்கள் சொல்கிறார்கள். இவ்வாறு பேசுவதால் எதுவும் நடைபெறாது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது இத்தகைய கமிஷன் விவகாரம் இருக்கவில்லை. நான் லாட்டரியை ரத்து செய்தபோது பலர் எனக்கு பணம் கொடுக்க முன்வந்தனர். அவற்றை … Read more

சிவகாசி மாணவிக்கு தங்கப்பதக்கம்

விருதுநகர் சிவகாசி, இந்திய இளைஞர் கூட்டமைப்பு சார்பில் பன்னாட்டு அளவிலான சிலம்பம்போட்டி நேபாளத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சிவகாசி எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லூரியில் படிக்கும் வணிகவியல்துறை மாணவி அவ்வைமாரியம்மாள் கலந்து கொண்டு தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். சாதனை மாணவி அவ்வை மாரியம்மாளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டுவிழா நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் பழனீஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் விஜயகுமாரி, பேராசிரியர்கள், மாணவிகள் பாராட்டினர். தினத்தந்தி Related Tags : தங்கப்பதக்கம்

கொரோனா, எச்.ஐ.வி, குரங்கு அம்மை ; ஒரே நபருக்கு பாதிப்பு

ரோம், இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் ஒருவருக்கு கொரோனா, எச்.ஐ.வி, குரங்கு அம்மை என மூன்று நோய் பாதிப்பும் கண்டறியப்பட்டு இருப்பது மருத்துவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஐந்து நாள் பயணமாக ஸ்பெயின் சென்று வந்த 36 வயது நபருக்கு 9 நாட்கள் கழித்து தொண்டை வலி, சோர்வு, தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டுள்ளன. ஏற்கனவே கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் அவர் போட்டுக்கொண்டுள்ளார். அவருக்கு ஒருமுறை கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சிறிய, … Read more

ஒரு தோடு 17000 ரூபாயா.. தங்கமும் இல்ல, வைரமும் இல்ல.. இப்படி இறங்கிட்டீங்களே!

பொதுவாக ஆடம்பர பிராண்டுகள் பலவும் தங்களின் வாடிக்கையாளார்களை கவர, வடிவமைப்புகளை வித்தியாசமான வடிவமைப்பார்கள். பல வித்தியாசமான படைப்புகளையும் நாம் அதில் பார்க்க முடியும். அதில் சமீபத்தில் பிரபலமான ஆடம்பர பிரண்டான லூயிஸ் உயிட்டன் பெயிண்ட் டப்பா வடிவில் ஒரு பேக்கினை வெளியிட்டிருந்தது. இதுபோன்ற ஆடம்பர பிராண்டுகள் வாடிக்கையாளார்களை கவருவதற்காக உருவாக்கினாலும், இது பார்ப்போரை திகைக்க வைக்கும் விதமாக உள்ளது. 4 உருளைகிழங்கு சிப்ஸ் 15,800 ரூபாயா.. ஆடிப்போன கஸ்டமர்..! பலென்சியாகா பலென்சியாகா என்ற ஆடம்பர பிராண்ட் நிறுவனம் … Read more

பேரிச்சம் பழம் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதா? எப்போது சாப்பிட வேண்டும்..

பேரிச்சம் பழம் அதிக கலோரிகள் இருப்பதால் அதை எப்போது சாப்பிட வேண்டும் என்ற சந்தேகம் வருவது இயல்பு. பேரிச்சம் பழத்தில் அதிக நார்சத்து இருக்கிறது. இது நமது ஒட்டு மொத்த அரோக்கியத்திற்கும் நன்மை தருகிறது. ஜீரண மண்டலத்தை சீர்படுத்த உதவுகிறது. இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிக நன்மைகள் அளிக்கிறது. இரவில் ஊரவைத்து மறுநள் பேரிச்சம் பழம் சாப்பிடுவதா ? அல்லது வெறும் வயிற்றில் பேரிசம்பழம் சாப்பிடுவதா ? இரவு தூங்கப்போவதற்கு முன்பு பேரிச்சம் பழம் சாப்பிடுவதா … Read more

பல மாவட்டங்களுக்கு போதை மருந்தை விற்பனை செய்த பொறியியல் பட்டதாரி கைது..!

தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் உள்ள மாணவர்களை போதை ஊசிகளுக்கு அடிமையாக்கிய திருச்சியைச் சேர்ந்த பெண் உட்பட 6 பேரை, போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனுாரில் இளைஞர்கள் போதை ஊசி செலுத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலை அறிந்து அங்கு சென்ற தனிப்படை போலீசார், உத்தமபாளையம் இந்திரா நகர் முகமது மீரான் வயது 22, சின்னமனுார் சாமிகுளத்தைச் சேர்ந்த மாணிக்கம் வயது 19, ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், … Read more

70-வது பிறந்தநாள் | விஜயகாந்தை நேரில் சந்தித்து தொண்டர்கள் வாழ்த்து

சென்னை: தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் இன்று அக்கட்சியின் சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துகளைப் பெறுவதற்காக, விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தார். முன்னதாக காரில் வந்த … Read more