திடீரென ஏற்பட்ட எரிபொருள் வரிசைகள் – காரணம் வெளியிட்ட அமைச்சர்

எரிபொருள் இறக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இன்று நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி அனுமதிப்பத்திர பிரச்சினை காரணமாக சுப்பர் டீசல் எரிபொருளை இறக்குவதில் தாமதம் ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், எரிபொருளை வெளியேற்றும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். பெரும்பாலான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல் இருப்புடன் இணைந்து பெற்றோல் விநியோகிக்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார். சில பகுதிகளில் போக்குவரத்து … Read more

அரசு பள்ளி வளாகத்தில் விஷம் குடித்த மாணவர்

ஆத்தூர்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சதாசிவபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிரிநாத்(17) என்பவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்தாண்டு நடைபெற்ற 11ம் வகுப்பு தேர்வில் 4 பாடப்பிரிவுகளில் தோல்வி அடைந்தார். இதையடுத்து, துணை தேர்வில் கலந்து கொண்டு  4 பாடப்பிரிவுகளுக்கான தேர்வினை எழுதினார். இதன் முடிவு நேற்று முன்தினம் வெளியானது. இதில், கணிதம் மற்றும் வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் மீண்டும் கிரிநாத் தோல்வியடைந்தார். நேற்று காலை வழக்கம்போல் … Read more

டெல்லி – வாரணாசி புல்லட் ரயில் திட்ட அறிக்கை நிராகரிக்கப்பட்டதா? ரயில்வே அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: டெல்லி – வாரணாசி இடையே புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்துவது பரிசீலனையில் உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லி – வாரணாசி இடையே புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக சமீபத்தில் நடந்த அதிகாரிகள் கூட்டத்தில், இந்த ரயில் திட்ட பாதையில் பல குறுகலான வளைவுகள் இருப்பதால், இதற்கான சாத்தியக்கூறு அறிக்கை நிராகரிக்கப்பட்டதாக வெளியான தகவலை ரயில்வே அமைச்சகம் மறுத்துள்ளது. இது குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘டெல்லி-வாரணாசி புல்லட் ரயில் … Read more

‛பென்சில்' பட இயக்குனர் மணி நாகராஜ் திடீர் மறைவு

ஜிவி பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடித்த பென்சில் படத்தை இயக்கியவர் மணி நாகராஜ். தற்போது இவர் வாசுவின் கர்ப்பிணிகள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு வளர்ந்து வருகிறது. சமீபத்தில் இதன் போஸ்டர் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அதில் விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்த அனிகா, நடிகைகள் வனிதா, சீதா மற்றும் லீனா குமார் ஆகியோர் கர்ப்பமாக இருப்பது போன்று அந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இயக்குனர் மணி நாகராஜ் மாரடைப்பால் இன்று(ஆக., 25) … Read more

என்னது…ராக்கெட்ரி பட கதை உண்மை இல்லையா?…பகீர் கிளப்பும் இஸ்ரோ விஞ்ஞானிகள்

சென்னை : நடிகர் மாதவன் சமீபத்தில் இயக்கி, நடித்த படம் ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட். மாதவன், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் ஜுலை 1 ம் தேதி 5 மொழிகளில் ரிலீசாகி பெரும் வரவேற்பை பெற்றது. இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் பயோபிக் படமான இதில் நம்பி நாராயணன் ரோலில் மாதவனும், அவருடைய மனைவி ரோலில் சிம்ரனும் நடித்திருந்தனர். அனைத்து தரப்பிலும் வரவேற்பை பெற்ற இந்த படம் பாக்ஸ் ஆபீசிலும் நல்ல வசூலை … Read more

அரசியல் ஆதாயத்துக்காக என் பேச்சை திரித்து வெளியிட்டால் சட்டப்படி நடவடிக்கை நிதின் கட்காரி எச்சரிக்கை

புதுடெல்லி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி, கடந்த வாரம் பா.ஜனதா ஆட்சி மன்ற குழுவில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் நிதின் கட்காரி கலந்து கொண்டார். அங்கு பேசுகையில் ஒரு பழைய சம்பவத்தை நினைவுகூர்ந்தார். மராட்டிய மாநிலத்தில் ஒரு கிராமத்துக்கு சாலை அமைக்க அவர் திட்டமிட்டார். அதைப்பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் அவர் பேசும்போது, ”என்ன பின்விளைவுகள் ஏற்பட்டாலும் இதை செய்வேன். நீங்கள் என்னுடன் இருந்தால் … Read more

பெரம்பலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

பெரம்பலூர் பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா, குடியரசு தின விழாவையொட்டி பெரம்பலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று 14 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கைப்பந்து, கால்பந்து, பூப்பந்தாட்டம், ஹேண்ட் பால், எறிபந்து, கோ-கோ, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், கபடி உள்ளிட்ட போட்டிகள் பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டியினை பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் தலைவர் … Read more

பாகிஸ்தானில் பலத்த மழையில் பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பரவலாக நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அங்கு பஞ்சாப் மற்றும் கைபர்பக்துங்குவா மாகாணங்களில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையாலும், வெள்ளத்தாலும் 6 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பள்ளி மாணவர்கள் 6 பேரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விட்டனர். பஞ்சாப் மாகாணத்தில் மலைப்பாதையில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் 2 பேர் பலியாகி உள்ளதை மீட்பு படையினர் உறுதிப்படுத்தினர். … Read more

மாட்டு சாணத்தில் இருந்து பயோ கேஸ்.. பிரம்மாண்ட திட்டத்தை செயல்படுத்தும் HPCL..!

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் GOBAR-Dhan திட்டத்தின் கீழ், ராஜஸ்தானின் சாஞ்சூரில் தனது முதல் மாட்டு சாணத்திலிருந்து கம்பிரஸ்டு பயோகேஸ் திட்டத்தைத் தொடங்கியது. ஒரு வருடத்தில் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆலை, ஒரு நாளுக்கு 100 டன் மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்திப் பயோகேஸ் தயாரிக்கப் பயன்படுத்துகிறது. மேலும் இத்தொழிற்சாலையில் இருந்து உருவாக்கப்படுவது மட்டும் அல்லாமல் கம்பிரஸ்டு பயோகேஸ்-ஐ வாகனங்களுக்கான எரிபொருளாகப் பயன்படுத்த முடி முடிவு செய்துள்ளது. தூள் கிளப்பிய ஹிந்துஸ்தான் யூனிலீவர்.. முதல் காலாண்டில் ரூ.2391 கோடி … Read more

தினமும் 3 வேளை வெந்தயம்… சுகர் இருக்கிறவங்க இதை ட்ரை பண்றீங்களா?

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினை நீரிழிவு நோய். உடல் ரத்தத்தில் சர்ககரையின் அளவு சமநிலை தவறும்போது இந்நோய் தாக்கம் ஏற்படுகிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிப்பது மிகவும் அவசியம். அதே சமயம் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சில இயற்கை முறை உணவுகள் மூலம் உடலின் அதிகப்படியான சர்க்கரையை கட்டுப்படுத்தலாம். தங்கள் சாப்பிடும் உணவின் மூலமாகவே நீரிழிவு நோயாளிகள் தங்களின் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை சீரான நிலைக்கு … Read more