பிரித்தானியா முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து: கூறப்படும் காரணம்


கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வண்ண விளக்குகளால் களைகட்டும்

நாடு முழுவதும் உள்ள கவுன்சில்கள் கிறிஸ்துமஸ் தெரு காட்சிகள் மற்றும் பண்டிகை தொடர்பான அலங்காரங்களை ரத்து

பிரித்தானிய குடிமக்கள், நிறுவனங்கள் மற்றும் கவுன்சில்கள் விலைவாசி உயர்வு நெருக்கடியைச் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் வண்ண விளக்கு அலங்காரங்கள் ஏதுமற்ற கிறிஸ்துமஸ் பண்டிகையாக இந்தமுறை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரித்தானியாவில் எரிசக்தி கட்டணமானது பல மடங்கு அதிகரிக்கும் என்ற நிலையில், மில்லியன் கணக்கான மக்களுக்கு இந்த முறை கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இருக்காது என்றே கூறப்படுகிறது.

பிரித்தானியா முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து: கூறப்படும் காரணம் | All Over Country Christmas Lights Cancelled

@Bristol Post

பொதுவாக கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெரு நகரங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் வண்ண விளக்குகளால் களைகட்டும்.
ஆனால் இந்தமுறை அவ்வாறான வண்ண விளக்கு அலங்காரங்கள் எதுவுமிருக்காது என்றே கூறப்படுகிறது.

அதிகரிக்கும் எரிசக்தி கட்டணங்களால் வணிக நிறுவனங்களும் இந்தமுறை வண்ண வண்ண அலங்காரங்களுக்கு முயற்சிக்காது என்றே கூறுகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள கவுன்சில்கள் கிறிஸ்துமஸ் தெரு காட்சிகள் மற்றும் பண்டிகை தொடர்பான அலங்காரங்களை ரத்து செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான மக்களும் எரிசக்தி கட்டண உயர்வால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் ஆர்வமற்று காணப்படுவதாக கூறப்படுகிறது.
பல கவுன்சில்கள் கிறிஸ்துமஸ் வண்ண விளக்கு அலங்காரங்கள் அனைத்தும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 

பிரித்தானியா முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் ரத்து: கூறப்படும் காரணம் | All Over Country Christmas Lights Cancelled

@getty



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.