நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விநாயகர் சதுர்த்தியையொட்டி வீடுகள், பொது இடங்களில் சிலைகளை வைத்து பூஜை செய்வர். அந்த சிலைகளை ஆறு, குளம், கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பர். இந்நிலையில், மகராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் ரபொடி பகுதியில் விநாயகர் சிலைகளை கரைக்க செயற்கையாக ஏரி அமைக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியை சேர்ந்த பலர் இந்த ஏரியில் விநாயகர் சிலைகளை கரைத்தனர். இதற்கிடையில் அந்த பகுதியை சேர்ந்த ஜஹித் அசா ஷேக் என்ற 7 வயது சிறுவன் அந்த செயற்கை ஏரியில் குளிக்க சென்றுள்ளான். திடீரென அந்த ஏரியில் மூழ்கிய சிறுவன் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.