கோரக்பூர் : உத்தர பிரதேசத்தின் கோரக்பூர் நகராட்சியில் வார்டு மறுவரையறை செய்யும் பணியில், முஸ்லிம் பெயர்களை உடைய வார்டுகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. இதற்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
முதல்வரின் சொந்த ஊரான கோரக்பூர் நகராட்சியில் உள்ள வார்டுகளை மறுவரையறை செய்யும் பணியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இதன் வாயிலாக வார்டுகளின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது.பல்வேறு வார்டுகளின் பெயர்கள் மாற்றப்பட்டு, முக்கிய பிரமுகர்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.
இல்லாஹி பாக் வார்டு பந்துசிங் நகர் என்றும், இஸ்மாயில்பூர் சஹாப்கஞ்ச் என்றும், ஜப்ரா பஜார் ஆத்மாராம் நகர் என்றும் மாற்றப்பட்டு உள்ளன. முஸ்லிம் பெயர்களை உடைய பல்வேறு வார்டுகளும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.
இந்த நடவடிக்கைக்கு சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதில் ஆட்சேபம் இருந்தால், லக்னோவில் உள்ள நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலரிடம், பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை ஒரு வாரத்திற்குள் தெரிவிக்கலாம் என, நகராட்சி கமிஷனர் அவினாஷ் சிங் தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement