வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : ‘வரும் 2030ல், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடிக்கும்’ என நிபுணர்கள் கணித்துஉள்ளனர். ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்தின் தரவுகள், டாலருக்கு எதிரான பணத்தின் மதிப்பு ஆகியவற்றை கணக்கிட்டு, உலக நாடுகளின் பொருளாதார நிலையை வரிசைப்படுத்தி, ‘புளூம்பெர்க்’ நிறுவனம் பட்டியல் வெளியிட்டது.
முன்னேற்றம்அதில், கடந்த ஏப்., – ஜூன் காலாண்டு கணக்கின்படி, உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா முன்னேறி உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தை இந்தியா பிடித்துள்ளது.இதன் வாயிலாக பிரிட்டன் ஆறாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதே பட்டியலில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இந்தியா 11வது இடத்தில் இருந்தது; பிரிட்டன் ஐந்தாவது இடத்தில் இருந்தது.
![]() |
இது குறித்து, வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பின் இயக்குனர் ஜெனரல் சச்சின் சதுர்வேதி கூறியதாவது:பிரிட்டனை நாம் முந்துவது முதல்முறை அல்ல. கடந்த 2019ல் கூட பிரிட்டனை பின்னுக்கு தள்ளி, நாம் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறினோம். நாம் மூலதனச் செலவில் கவனம் செலுத்துகிறோம். வருவாய் செலவினங்களை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். பணவீக்கத்தை இலக்காகக் கொண்ட ரிசர்வ் வங்கியின் பொருளாதார திட்டங்கள் மிகவும் சீரான முறையில் வளர்ச்சியடைய உதவியது.
அதன் முடிவுகள் பலன் அளிக்க துவங்கி உள்ளன.இவ்வாறு அவர் கூறினார். பெருமையான தருணம்”இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து வருகிறது. வரும் 2028 – 30ல், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக நாம் உயர்வோம்,” என, நம் நாட்டின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் விர்மானி தெரிவித்தார்.மூத்த பொருளாதார நிபுணர் சரண் சிங் கூறியதாவது:
இந்தியாவுக்கு இது மிகப் பெருமையான தருணம். வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தில் நாம் மிகச் சிறப்பான நிலையில் உள்ளோம்.உலக அளவில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா உள்ளது என்பதை, சர்வதேச நிதியம் பல ஆண்டுகளாகவே கணித்து வருகிறது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. உலகமே பொருளாதார நெருக்கடியில் உள்ள வேளையில், இந்திய பொருளாதாரம் மட்டும் வளர்ச்சி அடைந்து வருகிறது. பிரிட்டனின் இந்த பின்னடைவு, அவர்கள் நாட்டு தேர்தலில் எதிரொலிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement