அந்த எண்ணம் இல்லை.. டாக்டர் பட்டம் வாங்கின கையோட யுவன் சொன்ன விஷயத்தை கவனிச்சீங்களா?

சென்னை: வின்னர் படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தற்சமயம் இசையமைக்கிறார்.

வின்னர் படத்தில் பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் ஆனது. இப்போது காஃபி வித் காதல் ஒரு ஜாலியான படமாக உருவாவதால் இந்தப் படத்தின் இசைக்கும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

யுவனை சிறுவயதில் இருக்கும்போதே தான் பார்த்ததாக சுந்தர்.சி சில சுவாரஸ்ய நிகழ்வுகளை கூறியுள்ளார்.

ட்ரக் டீலர் யுவன்

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை பல பேரை அடிமையாக்கி வைத்துள்ளது. BGMகளின் நாயகன் என்று யுவனை அவரது ரசிகர்கள் கொண்டாடுவதுடன், இவரை Drug Dealer என்றும் அழைத்து வருகின்றனர். இசையமைப்பாளராகவும், பாடகராகவும் சிறந்து விளங்கும் இவருக்கு, சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட யுவன்சங்கர் ராஜா, நமது பிலிம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்

 சரியான நேரத்தில் கிடைத்த பரிசு

சரியான நேரத்தில் கிடைத்த பரிசு

கேள்வி: டாக்டர் பட்டம் பெற்றது குறித்து நீங்கள் கூற விரும்புவது?

பதில்: இசையமைப்பாளர் மற்றும் பாடகராக சிறந்து விளங்கியமைக்காக சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவப்படுத்தியது சந்தோஷம். மேலும் எனக்கு பெருமையாகவும் உள்ளது. காலம் தவறாமல் சரியான நேரத்தில் இந்த பட்டம் எனக்கு கிடைத்துள்ளது. இந்த பட்டத்தை பெறும்பொழுது, நான் கடந்த வந்த பாதை தான் நினைவுக்கு வருகிறது என்றார்.

 தடைகளை கடக்க வேண்டும்

தடைகளை கடக்க வேண்டும்

கேள்வி: பட்டம் பெற்ற மாணவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

பதில்: சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழாவில், பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களுக்கும் பட்டம் வழங்கப்பட்டது. இம்மாணவர்கள், தடைகள் எவ்வளவு வந்தாலும் மனதில் எதையும் வைத்து கொள்ளாமல் முன்னோக்கி செல்ல வேண்டும் என்றார்.

அந்த எண்ணம் இல்லை

கேள்வி: எம்.ஜி.ஆரின் பாடல்களை ரீமேக் செய்வீர்களா?

பதில்: எம்.ஜி.ஆர். பாடல்களை ரீமேக் செய்யும் எண்ணம் இல்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். எங்கள் வீட்டிற்கு வரும்போது, நான் சிறு பையன். அவரை நான் சுற்றி சுற்றி வந்தது தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது என்றார். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/5pd9MHppV5M இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.