வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
போபால் : கால்வாய் தண்ணீல் அடித்து செல்லப்பட்ட இளைஞரின் உயிரை காப்பாற்றிய பெண்ணின் வீரச் செயலை, போலீசார் வெகுமதி அளித்து பாராட்டினர்.
மத்திய பிரதேசம், போபாலில் உள்ள காதையகலா என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் ரபினா கன்ஜர், 30. இவர் தன் 10 மாத கைக்குழந்தையுடன் வந்து கால்வாய் அருகே உள்ள குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, கால்வாயின் மறுபுறம் ராஜு, ஜிதேந்திரா என்ற இரு இளைஞர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் கால்வாயில் இறங்கி கடக்க முயன்றனர். அன்று பெய்த கன மழை காரணமாக, கால்வாயில் தண்ணீர் பலத்த வேகத்துடன் கரைபுரண்டு ஓடியது. ‘கால்வாயில் இறங்கி கடக்க வேண்டாம்’ என, அவர்களை ரபினா எச்சரித்தார்.அதை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் இருவரும் கால்வாயில் இறங்கினர்.
![]() |
கட்டுக்கடங்காத வெள்ளத்தில் சிக்கி இருவரும் அடித்து செல்லப்பட்டனர்.அப்போது இளைஞர்கள் இருவரும் காப்பாற்றும்படிகதறினர்.கையில் இருந்த 10 மாத குழந்தையை தரையில் விட்டு விட்டு, ரபினா கால்வாயில் குதித்தார், ராஜு என்ற இளைஞரை காப்பாற்றி கரை சேர்த்த பின், ஜிதேந்திராவை காப்பாற்ற முயன்றார்.
அதற்குள் ஜிதேந்திரா தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரது உடல் மறுநாள் மீட்கப்பட்டது. தன் உயிரையும் பொருட்படுத்தாமல், தண்ணீரில் குதித்து இளைஞரின் உயிரை காப்பாற்றிய ரபினாவின் வீரச் செயலை பாராட்டி, போலீசார் அவருக்கு வெகுமதி அளித்தனர்.ஜிதேந்திராவின் உடலை மீட்க உதவிய ரபினாவின் சகோதரருக்கும் போலீசார் வெகுமதி அளித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement