ரஷ்ய வான் தாக்குதலால் கொளுந்து விட்டு எரிந்த உணவகத்தில் சிக்கிக்கொண்ட பூனைக்குட்டியை உக்ரைன் நாட்டு தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
ரஷ்ய படைகள் ராக்கெட் ஏவுகணை வீசி தாக்கியதில் கார்கீவ் நகரில் சுமார் 24,000 சதுரடி பரப்பளவிலான கட்டிடங்கள் தீக்கிரையாகின. அங்குள்ள உணவகத்தில், நெருப்புக்கு அஞ்சி இரும்பு சேர்களுக்கு அடியில் பதுங்கி கொண்ட பூனை குட்டியை தீயணைப்புத்துறையினர் மீட்டு தண்ணீரில் குளிப்பாட்டினர்.