நவீன ஹெலிகாப்டர் வாங்கிய ஜோய் ஆலுக்காஸ்.. எத்தனை கோடி தெரியுமா?

இந்தியா உள்பட உலகம் முழுவதும் நகைக்கடை வணிகம் செய்து வரும் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் நவீன ரக ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

ஜோஸ் ஆலுக்காஸ் வாங்கியுள்ள ஹெலிகாப்டரின் மதிப்பு ரூபாய் 90 கோடி என்று கூறப்படுகிறது.

இந்த ஹெலிகாப்டர் தங்களுடைய நிர்வாகிகளின் பயணத்திற்கு உதவும் என்று ஜோஸ் ஆலுக்காஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் வாங்கனும்.. 6 கோடி கடன் வேணும்.. வங்கி அதிகாரிகளுக்கு ஷாக் கொடுத்த விவசாயி..!

ஜோஸ் ஆலுக்காஸ்

ஜோஸ் ஆலுக்காஸ்

கேரளாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ் குழுமம் இந்தியா, துபாய், ஐக்கிய அரபு எமிரேட், பிரிட்டன், மலேசியா மற்றும் அமெரிக்கா உள்பட பல நாடுகளில் 100க்கும் மேற்பட்ட கிளைகளுடன் இயங்கி வருகிறது. இந்தியாவில் மட்டும் 85 கடைகளும் வெளிநாட்டில் 45 கடைகளும் இயங்கி வருகின்றன.

லியோனார்டோ AW 109 ஹெலிகாப்டர்

லியோனார்டோ AW 109 ஹெலிகாப்டர்

இந்த நிலையில் ஜோஸ் ஆலுக்காஸ் விலை உயர்ந்த, ஆடம்பரமான லியோனார்டோ AW 109 GrandNew என்ற இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டரை சமீபத்தில் வாங்கியுள்ளது. இதன் விலை சுமார் ₹90 கோடி என கூறப்படுகிறது.

ஹெலிகாப்டரின் தொழில்நுட்பம்
 

ஹெலிகாப்டரின் தொழில்நுட்பம்

நவீன இரட்டை எஞ்சின், மேம்பட்ட தொழில்நுட்பம், உயர் செயல்திறன் திறன்கள் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு ஆகியவற்றை கொண்டது இந்த 109 GrandNew ஹெலிகாப்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

 நவீன அம்சங்கள்

நவீன அம்சங்கள்

இந்த ஹெலிகாப்டரில் நேர்த்தியான உட்புறங்கள், கலை வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் கண்ணாடி காக்பிட் ஆகியவைகளை கொண்டுள்ளது. மேலும் ஆடம்பரமான வசதியான இருக்கை கட்டமைப்பு போன்ற நவீன அம்சங்களுடன் 109 GrandNew அமைக்கப்பட்டுள்ளது. நிகரற்ற செயல்திறன், சக்திவாய்ந்த இரட்டை FADEC PWC இன்ஜின்கள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் இதில் உள்ளது.

பயணம்

பயணம்

இந்தியாவின் ஜோஸ் ஆலுக்காஸ் நிர்வாக இயக்குநர் ஜாய் ஆலுக்காஸ் கூறுகையில், “Leonardo AW 109 GrandNew ஹெலிகாப்டர் ஒரு சிறந்த வகையாக உள்ளது. எங்கள் மூத்த நிர்வாகக் குழு இந்தியாவில் உள்ள எங்கள் கிளைகளுக்கு தடையின்றி பயணம் செய்ய உதவும் வகையில் இதனை நாங்கள் வாங்கியுள்ளோம். இந்த ஹெலிகாப்டர் ஒரு ஸ்டைலான மற்றும் நேர்த்தியான வடிவமைப்பை கொண்டுள்ளது. மற்ற ஹெலிகாப்டருடன் ஒப்பிடமுடியாத தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Joyalukkas group acquires Leonardo AW 109 helicopter

Joyalukkas group acquires Leonardo AW 109 helicopter | நவீன ஹெலிகாப்டர் வாங்கிய ஜோய் ஆலுக்காஸ்.. எத்தனை கோடி தெரியுமா?

Story first published: Monday, September 5, 2022, 16:22 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.