பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் விவசாயி சரவணனுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020ல் சிறுமியை கடத்திச் சென்று சோளக்காட்டில் வைத்து விவசாயி சரவணன்(48) பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் தாயார் அளித்த புகாரில் சரவணன் போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். குற்றம் நிரூபணமானதால் சவரணனுக்கு சாகும் வரை சிறை; ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
