புதுடெல்லி,
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இன்று இந்திய பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
இந்நிலையில், டெல்லியில் உள்ள வங்காளதேச தூதரகத்தில் ஷேக் ஹசினா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் ரோகிங்கியா விவகாரம், இரு நாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த ஷேக் ஹசினா, இந்தியா மிகப்பெரிய நாடு. ரோகிங்யா விவகாரத்தை சமாளிக்க இந்தியா எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவலாம்’ என்றார்.
Related Tags :