அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இகா ஸ்வியாடெக், பெகுலா காலிறுதிக்கு முன்னேற்றம்

நியூயார்க்,

‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் (போலந்து), ஜூல் நீமையருடன் (ஜெர்மனி) மோதினார். இந்த போட்டியில் இகா ஸ்வியாடெக் 2-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் ஜூல் நீமையரை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு 4-வது சுற்று போட்டியில் 21-ம் நிலை வீராங்கனையான பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), ஜெசிகா பெகுலாவுடன் (அமெரிக்கா) மோதினார். இந்த போட்டியில் பெகுலா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் கிவிடோவாவை வீழ்த்தி வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெற உள்ள காலிறுதி போட்டியில் இகா ஸ்வியாடெக், ஜெசிகா பெகுலா மோதுகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.