ஜம்மு, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, சர்வதேச எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதற்கு நம் படைகள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளன.ஜம்மு – காஷ்மீரில் எல்லையில், 2021 பிப்., 21 முதல் போர் நிறுத்தம் செய்வதாக இந்தியா, பாகிஸ்தான் அறிவித்தன. இதன்பின் பாக்., ராணுவம் பெரிய அளவில் தாக்குதலில் ஈடுபடவில்லை.இந்நிலையில், ஜம்மு – காஷ்மீரின் அர்னியாவில் சர்வதேச எல்லைக்கு அருகில் இருந்து பாக்., ராணுவம் நேற்று காலை திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. எல்லைக்கு அப்பாலில் இருந்து துப்பாக்கியால் சுடத் துவங்கினர்.இதையடுத்து நம் படைகளும் பதில் தாக்குதலை நடத்தின. இந்த துப்பாக்கிச் சண்டை சில மணி நேரம் நீடித்தது. ஆனால், இதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என, பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.இதற்கிடையே, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளுக்காக பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிக்க, ஜம்மு – காஷ்மீரின் பல இடங்களில் மாநில புலனாய்வு அமைப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement