டிஜிட்டல் கோல்ட், SIP-இல் முதலீடு.. இளைய தலைமுறையினர்களின் சேமிப்பில் எது அதிகம்?

கடந்த இருபது அல்லது முப்பது வருடங்களுக்கு முன்னர் இளைஞர்களிடம் சேமிப்பது குறித்த விழிப்புணர்வு அதிகமாக இல்லை. ஆனால் தற்கால இளைஞர்களிடம் சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகம் உள்ளது.

அது மட்டுமின்றி பாதுகாப்பாக சேமிப்பது என்பது குறித்த விழிப்புணர்வும் இன்றைய இளைஞர்களிடம் அதிகமாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.

அந்த வகையில் இன்றைய இளைஞர்கள் அதிகமாக மியூச்சுவல் பண்ட் எஸ்ஐபி முறையில் சேமித்து வருகின்றனர் என்றும் அதனை அடுத்து டிஜிட்டல் கோல்ட் முறையில் சேமித்து வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. லிக்விட் ஃபண்ட்கள் என்றால் என்ன?

இளைஞர்களின் சேமிப்பு

இளைஞர்களின் சேமிப்பு

இன்றைய இளைஞர்கள் இளம் வயதிலேயே சம்பாதிக்க ஆரம்பித்து விடுவதால் சேமிப்பு பழக்கமும் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி பொருளாதார வல்லுநர்கள் இளைய தலைமுறைக்கு சிறு வயதிலிருந்தே சேமிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதும் அதனால் இளம் தலைமுறையினர் மத்தியில் முதலீடுகள் மற்றும் நிதி திட்டமிடல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடி

கொரோனாவால் ஏற்பட்ட நிதி நெருக்கடி

கொரோனா காலத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி இளைஞர்கள் மத்தியில் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது என்றும் அதன் பின்னர் தான் இளைஞர்கள் பங்கு சந்தை முதலீடு, டீமேட் கணக்குகள், டிஜிட்டல் தங்கம் போன்றவற்றை ஆய்வு செய்து முதலீடு செய்து வருவதாகவும் தெரிகிறது.

கருத்துக்கணிப்பு
 

கருத்துக்கணிப்பு

இந்நிலையில் தனியார் நிறுவனம் CASHe எடுத்த கருத்துக் கணிப்பில் இளைஞர்கள் பெரும்பாலும் மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி முறையில் முறையில் சேமித்து வருகின்றனர் என்பது தெரிய வருகிறது. இதனை அடுத்து இரண்டாவதாக டிஜிட்டல் தங்கத்தில் அதிக இளைஞர்கள் சேமித்து வருகின்றனர்.

இலக்கு வைத்து சேமிப்பு

இலக்கு வைத்து சேமிப்பு

43 சதவீதம் இளைஞர்கள் தங்களது வருமானத்தில் 20 முதல் 25 வரை சேமிக்க தொடங்கிவிட்டதாக கருத்துக்கணிப்பின் முடிவு தெரிவித்துள்ளது. பல இளைஞர்கள் ஒரு குறிப்பிட்ட வயதை இலக்காக வைத்து சேமித்து வருவதாகவும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 திட்டமிடல்

திட்டமிடல்

இளம்வயதிலேயே சேமித்தால் தான் ஓய்வு காலத்தில் நிம்மதியாக பொருளாதார நெருக்கடி இன்றி வாழ முடியும் என்ற விழிப்புணர்வு 34 சதவீத இளைஞர்களிடம் உள்ளது என்றும் ஓய்வு காலம் குறித்து திட்டமிடவில்லை என 48 சதவீதம் இளைஞர்கள் தெரிவித்துள்ளதாகவும் இந்த கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

வரி சார்ந்த சேமிப்பு

வரி சார்ந்த சேமிப்பு

மொத்தத்தில் இளைஞர்களை பொறுத்தவரை சேமிக்க வேண்டும் என்ற பொறுப்பு அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பாக மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் டிஜிட்டல் தங்கத்தில் அதிகம் சேமிக்கவே இளைஞர் விரும்புவதாகவும் வரி சார்ந்த சேமிப்புத் திட்டங்களிலும் அதிக இளைஞர்கள் சேமித்து வருவதாகவும் இந்த கருத்துக் கணிப்பின் முடிவு தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mutual Fund SIPs Top Investment Preference For Millennials, Digital Gold Comes Second: Survey

Mutual Fund SIPs Top Investment Preference For Millennials, Digital Gold Comes Second: Survey | டிஜிட்டல் கோல்ட், SIP-இல் முதலீடு.. இளைய தலைமுறையினர்களின் சேமிப்பு எதில் அதிகம்?

Story first published: Tuesday, September 6, 2022, 17:03 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.