அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவருக்கு திடீரென தனது வங்கி கணக்கில் 50 பில்லியன் டாலர் வரவு வைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
ஒரே நாளில் அவர் உலக பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒரே நாளில் அவரது வங்கி கணக்கிற்கு 50 பில்லியன் டாலர் வரவு வைக்கப்பட்டதை அடுத்து அவர் என்ன செய்தார் என்பதை தற்போது பார்ப்போம்.
காதல் ஸ்கேம்.. ஆப் மூலம் பல ஆயிரம் டாலர் மோசடி.. சொகுசு கார்கள், ரோலக்ஸ் வாட்ச், தங்க நகை!

50 பில்லியன் டாலர்
நீங்கள் காலையில் தூங்கி எழுந்ததும் உங்கள் வங்கி கணக்கில் 50 பில்லியன் டாலர் வரவு வைக்கப்பட்டு இருந்ததை பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைவீர்கள் என்பது உண்மைதானே? அதுபோல்தான் அமெரிக்காவை சேர்ந்த லூசியானா என்ற பகுதியில் உள்ள டேரன் ஜேம்ஸ் என்பவர் காலை தூங்கி எழுந்ததும் தனது மொபைல் போனில் 50 பில்லியன் டாலர் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

இன்ப அதிர்ச்சி
இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான டேரன் ஜேம்ஸ் இந்த செய்தியைப் பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்து மீண்டும் மீண்டும் தனது வங்கி கணக்கை சோதனை செய்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரது வங்கி கணக்கில் 50 பில்லியன் டாலர் பேலன்ஸ் இருப்பதை உறுதி செய்தது.

மேனேஜருக்கு தகவல்
இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த டேரன் ஜேம்ஸ் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தார். இந்த நிலையில் அவர் வங்கி மேனேஜருடன் தொடர்பு கொண்டு தான் இவ்வளவு பெரிய தொகையை தனது வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யவில்லை என்றும் இந்த பணம் எப்படி வந்தது என்று தனக்கு தெரியாது என்றும் விளக்கமளித்தார்.

தவறுதலாக வந்த பணம்
இதனையடுத்து வங்கி அதிகாரிகள் அவரது வங்கி கணக்கை சோதனை செய்த போது தவறுதலாக அவருடைய வங்கிக் கணக்கில் 50 பில்லியன் டாலர் வரவு வைக்கப்பட்டது என மூன்று நாட்கள் கழித்து கண்டுபிடித்தனர். இதனை அடுத்து அவரது வங்கி கணக்கில் இருந்து 50 பில்லியன் டாலர் கழிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

25வது பணக்காரர்
டேரன் ஜேம்ஸ் என்பவரின் வங்கி கணக்கில் 50 பில்லியன் டாலர் வரவு வைக்கப்பட்ட தகவலை அடுத்து அவர் உலக பணக்காரர் பட்டியலில் 25வது இடம் பெற்றார். விர்ஜின் குழுமத்தின் உரிமையாளரான ரிச்சர்ட் பிரான்சனை விட 10 மடங்கு பணக்காரர் ஆனார்.

பழைய நிலை
ஒரே நாளில் 50 பில்லியன் டாலர் தனது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதால் உலகின் 25வது பணக்காரராக ஆன ஜேம்ஸ், ஒரு சில நாட்களில் மீண்டும் தனது பழைய நிலைக்கு வந்து விட்டார் என்பது குறிப்பிடப்பட்டது.
US Man Gets $50 Bn in His Account, Becomes Richer Than Richard Branson For A While
US Man Gets $50 Bn in His Account, Becomes Richer Than Richard Branson For A While | வங்கி கணக்கிற்கு திடீரென வந்த $50 பில்லியன்.. உலகப்பணக்காரர் பட்டியலில் கிடைத்த இடம்