செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில், இளைஞர் ஒருவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படும் திமுக கவுன்சிலர் அருண்குமார் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஊர் மக்கள் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
பணங்காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கெளதமன் என்பவர், அப்பகுதி கவுன்சிலர் அருண்குமார் ஊழல் செய்துவருவதாக சுவரொட்டிகள் ஒட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அருண்குமார், தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து கெளதமனை தாக்கியதுடன் கல்லை தூக்கிப்போட்டு அவரது காலை உடைத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காயரம்பேடு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டபோது உதவி ஆய்வாளர் குப்புசாமி வழக்கு பதிவு செய்ததோடு நிறுத்திகொண்டதாகவும் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை எனவும் புகார் எழுந்துள்ளது.