சென்னை: புதுப்பேட்டை படத்தில் “வரியா வரியான்னு” மட்டுமே லிரிக்ஸ் வைத்து அப்படியொரு கூஸ்பம்ஸ் கொடுத்திருந்தார் யுவன் சங்கர் ராஜா.
இந்நிலையில், மீண்டும் தனுஷ், யுவன் மற்றும் செல்வராகவன் கூட்டணியில் உருவாகி உள்ள நானே வருவேன் ஃபர்ஸ்ட் சிங்கிள் தற்போது வெளியாகி உள்ளது.
ஃபர்ஸ்ட் சிங்கிள் ஆரம்பித்து ஒரு நிமிடம் வரை பாட்டு கேட்கவில்லையே என இரண்டு ஹெட்செட்டையும் மாற்றி மாற்றி ரசிகர்கள் செக் செய்து பார்த்தது தான் மிச்சம்.
4.40க்குன்னு சொல்லி
பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், அதற்கு போட்டியாக ஒரு நாள் முன்னதாக வெளியாக உள்ள நானே வருவேன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று மாலை 4.40 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்போ வரும் அப்போ வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 7.37 மணிக்குத் தான் நடிகர் தனுஷ் அந்த பாடலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

ஒரு நிமிஷம் மியூசிக்
மொத்த பாடலே வெறும் 3.30 நிமிஷம் தான். லிரிக் வீடியோன்னு சொன்னாங்களே லிரிக்ஸ் வருமான்னு போட்டுக் கேட்ட ரசிகர்களுக்கு ஒரு நிமிஷமா யுவனின் திகிலூட்டும் இசை தான் மாறி மாறி வந்து ஹார்ட் அட்டாக்கையே வரவழைத்து விட்டது. ஒரு நிமிஷமா என்ன ஒன்னுமே கேட்கல என புலம்பிய ரசிகர்களுக்கு வீரா சூரா வாடா வாடா என செல்வராகவன் வரிகளில் யுவன் குரலில் பாடல் ஒலித்தது.

குறைவான லிரிக்ஸ்
புதுப்பேட்டை படத்தில் இடம்பெற்ற ‘வரியா வரியா’ வரிகளிலேயே ஒட்டுமொத்த பாடல்களும் இடையே கொஞ்சம் ‘தண்ணிக் கொண்டு போறவளே” உள்ளிட்ட லிரிக்ஸ்களுடன் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்நிலையில், அதே போல இந்த பாடலும் வாடா வாடா லிரிக்ஸ் உடனே ஒட்டுமொத்த பாடல்களும் மேலும், சில வரிகளை சுமந்து கொண்டு வெளியாகி உள்ளது.

யுவன் வாய்ஸ்
யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இந்த வீரா சூரா வாடா பாடலை பாடியுள்ளார். செல்வராகவன் படம் என்றாலே வித்தியாசமான இசையை கொடுக்கும் யுவன் இந்த பாடலுக்கும் அது போன்றே வித்தியாசமான இசையை போட்டுள்ளார். ரசிகர்கள் இடையே இமிடியேட் ஹிட் இந்த பாடல் அடிக்குமா என்று தெரியவில்லை. ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்கள் மண்டையை குடைந்து எடுக்கும் என்பது உறுதி.

வில்லுடன் தனுஷ்
வில் அம்புடன் நடிகர் தனுஷ் வேட்டையாடும் காட்சிகளுடன் லிரிக் வீடியோவில் வரும் காட்சிகள் கூஸ்பம்ப்ஸ் கொடுக்கின்றன. லுக் வைஸ் ஆகவும் ஆக்டிங்கிலும் அசத்தி இருக்கிறார் தனுஷ். நானே வருவேன் படத்தில் இரண்டு ராஜா என சொல்லி இருப்பது போல இந்த படத்தில் தனுஷ் டபுள் ஆக்ஷனில் நடித்துள்ளாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.