திமுக மாவட்ட செயலாளர்கள் யார்? லிஸ்ட்டை ஃபைனல் செய்த ஸ்டாலின்!

உட்கட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கீழ்மட்டம் முதல் மேல்மட்டம் வரை பதவிகளை பிடிப்பதில் பல்வேறு காய் நகர்த்தல்களை உடன்பிறப்புகள் செய்து வருகிறார்கள். குறிப்பாக, மாவட்ட செயலாளர்கள் பதவிகளை பிடிக்க பலரும் தங்களுக்கு தெரிந்த வகைகளில் லாபி செய்து வருகிறார்கள். திமுக, அதிமுகவை பொறுத்தவரை மாவட்ட செயலாளர்கள் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அமைச்சருக்கு ஈடாக அப்பதவிகள் பார்க்கப்படும். மாவட்ட செயலாளர்கள் பதவியில் இருப்பவர்கள் பல வழிகளில் கல்லா கட்ட முடியும் என்பதால், இந்த பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுவது வழக்கம்.

திமுகவை பொறுத்தவரை தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால், பல வழிகளிலும் வருமானத்தை அள்ளி விட கணக்கு போட்டு, மாவட்ட செயலாளர்கள் பதவியை பிடிக்க மிகப்பெரிய அளவில் லாபி நடைபெறுகிறது. தேர்தல் நடைபெற்றாலும், கட்சித் தலைவர் கைகாட்டும் நபரே மாவட்ட செயலாளராக அமர்வார். அவரது முடிவே இறுதியானதாக இருக்கும். அதன்படி, மாவட்ட செயலாளர்களை கட்சித் தலைவர்

இறுதி செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக முப்பெரும் விழாவுக்கு பிறகு முடிவு தெரியவர வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் ஸ்டாலின் தெளிவாக இருக்கிறார். அரசு ரீதியாக செயல்படுவது ஒருபக்கம் இருந்தாலும், கட்சி ரீதியாக மாவட்ட அளவில் கட்சியை வலுப்படுத்துவதில் மாவட்ட செயலாளர்கள் குறிப்பிடத்தக்க பங்காற்ற வேண்டும் என ஸ்டாலின் நினைக்கிறார். எனவே, மாவட்ட செயலாளர்கள் தேர்வில் கூடுதல் கவனம் செலுத்தி, தானே நேரடியாக ஈடுபட்டு வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக திமுக ஆட்சிப் பொறுப்பில் இல்லாத போதும், கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் தீர்மானித்துள்ளதாக கூறுகிறார்கள்.

மாவட்ட செயலாளர்கள் தேர்வை பொறுத்தவரை இதற்காக ஒரு டீமை களமிறக்கி அமைப்பு ரீதியாக செயல்படும் அத்தனை மாவட்டங்களிலும் ஃபுல் ரிப்போர்ட் ஒன்றை அவர் எடுத்துள்ளார். மாவட்டந்தோறும் உள்ள நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள், கட்சிக்காக அவர்கள் ஆற்றிய பங்களிப்புகள், கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் கூறும் கருத்துக்கள், அண்டர்கிரவுண்ட் டீலிங்குகள் என ஏ டூ இசெஸ்ட் தரவரிசைப்படுத்தி ஸ்டாலின் களமிறக்கிய டீம் அவருக்கு ரிப்போர்ட்டாக தந்துள்ளது. இதில் பல தகவல்கள் ஸ்டாலினுக்கே அதிர்ச்சி ரகம் என்கிறார்கள்.

அதுதவிர, உளவுத்துறை மூலமாகவும் மாவட்ட செயலாளர்கள் பற்றிய ஒரு ரிப்போர்ட் எடுக்கப்பட்டுள்ளதாம். அதுவும் ஸ்டாலின் கைகளுக்கு சென்றுள்ளதாக கூறுகிறார்கள். அதனடிப்படையில், சில பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாம். அதில், கடைசி பிரிவில் வரும் பையிலானவர்கள் ஓரங்கட்டப்பட்டு விடுவார்கள்; ஜஸ்ட் பாஸானவர்களுக்கு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு பொறுப்புகள் தர வாய்ப்பிருக்கிறது. 80, 90க்கு மேல் மார்க் எடுத்தவர்களுக்கு கண்டிப்பாக பொறுப்புகள் வழங்கப்படும் என்கிறார்கள். மாவட்ட செயலாளர்கள் இப்போதே தங்களை சுயபரிசோதனை செய்து தாங்கள் எவ்வளவு மார்க் வாங்கியிருக்கிறோம் என்று கணக்குப் போட்டுக் கொள்ளலாம் என்று விரிவாக முடித்தார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.