
திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக் கொள்வேன் : தபு ஏற்படுத்திய பரபரப்பு
தமிழில் கதிர் இயக்கிய காதல் தேசம் படத்தில் அறிமுகமான பாலிவுட் நடிகை தபு, பின்னர் இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது 50 வயதாகும் தபு திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், அனைத்து பெண்களையும் போலவே எனக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனபோதிலும் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். திருமணம் செய்து கொள்ளாமலேயே குழந்தை பெற்றுக் கொள்வேன் என்று கூறியிருக்கிறார் தபு. அதோடு, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தோன்றினால் வயது ஒரு தடையில்லை. வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அதனால் என்னை பொறுத்தவரை குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார். தபுவின் இந்த பேட்டி சோசியல் மீடியாவில் மிகப்பெரிய விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.